ஆகஸ்ட் ஐந்தாம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பம்
க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாவுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.
ஐந்தாம் திகதி ஆரம்பமாகும் பரீட்சை 29ஆம் திகதி நிறைவு பெறும் என்றும் எதிர்வரும் 17ஆம் திகதி ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் இம்முறை 334,662 தோற்றவுள்ளனர். உயர்தரப் பரீட்சைக்கு 234,197 தோற்றவுள்ளனர். தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 62,134 விண்ணப்பத்துள்ளனர்.
க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Comments
Post a Comment