2018ஆம் ஆண்டு வாக்காளர்களின் எண்ணிக்கை

நாட்டின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1 கோடியே 55 இலட்சத்து 92 ஆயிரத்து 96 ஆகும். 


இந்த வருடத்திற்கான வாக்காளர் இடாப்புக்கு அமைவாக, அதாவது 2018 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு உட்பட்ட வகையில் இவ்வாறு கணக்கிடப்பட்டிருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. 

கடந்த வருட வாக்காளர் பட்டியலிலும் பார்க்க இம்முறை 2 இலட்சத்து 31 ஆயிரத்து 229 பேர் புதிதாக வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆகக் கூடுதலான வாக்காளர்கள் கம்பாஹ மாவட்டத்திலேயே இடம்பெற்றுள்ளனர். 

இத்தொகை 17 இலட்சத்து 51 ஆயிரத்து 892 ஆகும். கொழும்பு, குருநாகல், கண்டி ஆகிய மாவட்டங்கள் இதில் முறையே இரண்டாம் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களில் இடம்பெற்றுள்ளன. 

குறைந்த வாக்காளர்களைக் கொண்ட மாவட்டம் திருகோணமலையாகும். எதிர்கால தேர்தல்களுக்கு 2018 ஆண்டு வாக்காளர் இடாப்பே பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்