புதிய ஜனாதிபதி கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு - நேரடி ஔிபரப்பு
புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
(பின்னிணைப்பு - 10.59 am) புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டபய ராஜபக்ஷ சற்று முன்னர் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி செயலகத்திலேயே தனது கடமைகளை சற்று முன்னர் பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஜனாதிபதியின் செயலாளராக பேராசிரியர் பி. பீ. ஜயசுந்தர நியமிக்கபடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நியமனங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Comments
Post a Comment