1000 ஆண்களுடன் உறவுகொண்ட பெண்!
தான் பாலியலுக்கு அடிமை என்கிறார். -
பிரிட்டனைச் சேர்ந்த 42 வயதான பெண்ணொருவர் தான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களுடன் பாலியல் உறவுகொண்டதாக கூறுகிறார்.
கிறிஸ்டல் வாரென் எனும் இப்பெண் தான் பாலியலுக்கு அடிமையான ஒருத்தி என்கிறார்.
இவர் 15 வயதில் கன்னித்தன்மையை இழந்தாராம். 17 வயதையடைந்தபோது ஏற்கெனவே 40 பேருடன் உறவுகொண்டிருந்தாராம்.
"மக்கள் பொதுவாக பாலியலுக்கு அடிமையாதலை பெண்களுடன் தொடர்புபடுத்த மாட்டார்கள். பாலியல் உறவை தவிர்ப்பதற்கு காரணம் கூறுபவர்களாகத் தான் நாம் (பெண்கள்) இருப்போம். ஆனால் எனது நிலை வித்தியாசம். நான் நாள் முழுவதும் செக்ஸ் பற்றி எண்ணிக்கொண்டிருப்பேன்" என கிறிஸ்டல் வாரென் தெரிவித்துள்ளார்.
அவர் பாலியல் தொழிலாளியாக தொழில்புரிந்ததில்லை. தற்போது கடையொன்றில் முகாமையாளராக பணியாற்றுகிறார்.
வார இறுதி நாட்களில் பகலில் மதுபான விடுதிகளுக்கோ தேனீர் விடுதிகளுக்கோ சென்று யாரேனும் ஆணை தேடிப்பிடித்து வீட்டிற்கு அழைத்துவருவதை வாடிக்கையாக கொண்டிருந்தாராம் அவர்.
ஒரு மோசமான நாளில் 24 மணித்தியால இடைவெளியில் 7 பேருடன் உறவுகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
'என்னை மோசமாக மக்கள் எண்ணுவார்கள். ஆனால் என்னால் இந்த அவாவை கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. இது மாத்திரமே எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. அதனால் தொழில்சார் நிபுணர் ஒருவரிடம் சென்று ஆலோசனை பெறுவதற்கு என்னால் முடியவில்லை. ஆனால் நான் எப்போதும் பாதுகாப்பான உறவுகளையே மேற்கொண்டேன். ஒருபோதும் பாலியல் சார்ந்த நோய்களுக்கு ஆளாகவில்லை' என அவர் கூறியுள்ளார்.
40 வயதை அடைந்தபோதே தனதுநெருங்கிய நண்பியொருவர் இந்நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவினார் என அவர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment