மாளிகைக்காடு ஷேய்கா அப்துல்லாஹ் அல் – ஸயீர் அரபுக்கல்லூரியில் முப்பெரும் விழா

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

மாளிகைக்காடு ஷேய்கா அப்துல்லாஹ் அல் – ஸயீர் அரபுக்கல்லூரி மாணவிகளுக்கான பரிசளிப்பு ,  இரண்டாம் மாடிக்கட்டிட நிர்மாண பணிகளை ஆரம்பித்து  வைத்தல் மற்றும்  அதிதிகள் பாராட்டி கௌரவித்தல் போன்ற முப்பெரு விழா நாளை  ஞாயிற்றுக் கிழமை( 2 ) மாளிகைக்காட்டில்  இடம்பெறவுள்ளது.
கல்லூரியின் அதிபர் சட்டத்தரணி எம்.ஸி.ஆதம்பாவா தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.திலீப் நவாஸ்  பிரதம அதிதியாகவும் , சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம்.ஹனீபா கௌரவ அதிதியாகவும் , காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.எம்.இஸ்மாயில் , சமய சமூக ஆர்வலர் எம்.பீ.எம்.பரீன் , மாளிகைக்காடு பிஸ்மில்லா ஹோட்டல் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எம்.எம்.தஸ்லீம் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வின் போது பாடவிதான அபிவிருத்தி , ஒழுக்க விழுமியங்கள் , கல்லூரிக்கான வருகை , சமய கிரிகை ஒழுங்கு , பாடநூல்களை ஒழுங்காக பேணுதல் , இணைப்பாடவிதான செயற்பாடு , தலைமைத்துவம் ஆகியவற்றில் தமது திறமைகளை வெளிக்காட்டிய இக்கல்லூரியில் கல்வி பயிலும் 60 மாணவிகள் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளதுடன் மாளிகைக்காடு பிரதேசத்தை சேர்ந்த முக்கியஸ்தர்களும் கௌரவிக்கப்படவுள்ளனர்.
மாளிகைக்காடு ஷேய்கா அப்துல்லாஹ் அல் – ஸயீர் அரபுக்கல்லூரி கட்டிட நிர்மாண பணிகளுக்காகவும் நிர்வாக செயற்பாடுகளுக்காகவும்   ஜனாபா காலிதா நஸீர் அல் – ஸயீர் தொடர்ச்சியாக நிதியுதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்