கல்முனையில் பெண்கள் நத்தார் இன்னிசை ஆராதனை வழிபாடு



இலங்கை மெதடிஸ்த திருச்சபையின்  வடக்கு கிழக்கு திரு மாவட்ட  பெண்கள் ஐக்கிய சங்கத்தின்  “வாழ்வு  கொடுக்கும் இறைவன்” பெண்கள் நத்தார் இன்னிசை ஆராதனை வழிபாடு சமீபத்தில்  கல்முனையில் நடை பெற்றது.

இந்த ஆராதனை வழிபாட்டில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின்  பிரதித் தலைவர் பி. தம்மிக்க பெர்ணாந்து பிரதம அதிதியாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்த நத்தார் இன்னிசை ஆராதனை கல்முனை மெதடிஸ்த ஆலயத்தில் நடை பெற்றது.

இலங்கை மெதடிஸ்த திருச்சபையின்  வடக்கு கிழக்கு செயலாளர் அருட் திரு சுஜிதர் சிவநாயகம் தலைமையில் நடை பெற்ற  பெண்கள் நத்தார் இன்னிசை வழிபாட்டில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு , திருகோணமலை ,மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் அதிகமான பெண்கள் ஐக்கிய சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கல்முனை நகர மத்தியில் ஒன்று சேர்ந்த வடக்கு கிழக்கு பெண்கள் ஐக்கிய சங்க உறுப்பினர்கள் கல்முனை பெண்கள் ஐக்கிய சங்க உறுப்பினர்களால் வரவேற்கப்பட்டு கல்முனை  மெதடிஸ்த திருச்சபைக்கு அழைத்து வரப்பட்டனர்.

வழிபாட்டில் கலந்து கொண்ட பெண்கள் ஐக்கிய சங்க உறுப்பினர்களால் கரோல் கீதம் இசைக்கப்பட்டதுடன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மெதடிஸ்த திருச்சபையின்  பிரதித் தலைவர் பி. தம்மிக்க பெர்ணாந்துவுக்கு முன்னாள் மெதடிஸ்த திருச்சபையின்  பிரதித் தலைவர் வீ.பிரபாகரன் மற்றும் கல்முனை மெதடிஸ்த திருச்சபை போதகர் அருட்பணி எஸ்.டி.வினோத் ஆகியோரால் நினைவு  சின்னம் வழங்கப்பட்டது









Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று