பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற ஒளி விழா
( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி கிறிஸ்தவ ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த ” ஒளிவிழா ” பாடசாலை ஆராதனை மண்டபத்தில் பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் நேற்று புதன் கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்லாறு மெதடிஸ்த திருச்சபை கல்லாறு கேசரம் அருட்செல்வி ஜோதினி சீனித்தம்பி , முன்னாள் மண்முனை தென் எருவில்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.திரவியராஜா , ஓய்வுபெற்ற ஆசிரியைகளான ஜயந்தி , சுந்தரி , பாடசாலை பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் , கல்வி சாரா உத்தியோஸ்தர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
Comments
Post a Comment