G-15 நாடுகளின் தலைமைப் பொறுப்பு இலங்கைக்கு

எதிர்வரும் மே மாதம் 17ம் திகதி ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் G-15 நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ளது 989ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தின் அமெரிக்காவைச் சேர்ந்த 18 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.இதன் முதல் மகாநாடு 1990 இல் மலேசியாவில் நடைபெற்றது

இதன் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது ஜனாதிபதி தனது கடந்த பதவிகாலத்தில் ஈரானுக்கு இரண்டு தடவைகள் விஜயம் செய்துள்ளார் என்பது குறிபிடதக்கது இந்த முறை விஜயத்தின் போது ஈரானிய ஜனாதிபதி அஹமட் நிஜாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். G-15 நாடுகளின் தலைமைப் பொறுப்பு இலங்கைக்கு கிடைக்கப் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. என்பதுடன் இரண்டு நாள் நடைபெறவுள்ள மாநாட்டின் போது தலைமைப் பதவி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. ஈரான் பல வழிகளிலும் இலங்கை பொருளாதரத்துக்கு உதவி வரும் நாடு என்பது இலங்கையின் தேயிலையை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடு என்பதும் குறிபிட தக்கது

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்