கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் பதவி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸுக்கு
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹர் ஸாலி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கல்முனை நியூஸ் இணையத்தளத்திற்கு சற்று முன் தெரிவித்தார்
தற்போது, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அனைத்துப் பொறுப்புக்களும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் பொறுப்பில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக மாட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளை ஜவாஹர் ஸாலி பெற்றார்.
Comments
Post a Comment