கட்சிகளின் தேசிய பட்டியலில் 03 முஸ்லிம்கள் மட்டும்
தேசிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி- ஏ எச் எம்அஸ்வர் ஐக்கிய தேசிய முன்னணி-
எம். ஹசன் அலி,
அஸ்லம் முஹம்மத் சலீம்
கட்சிகள் தமது தேசிய பட்டியலை அறிவித்துள்ளன இவற்றில் மொத்தமாக மூன்று முஸ்லிம்களின் பெயர்கள் மட்டும் இந்த முறை தேசிய பட்டியலில் உள்ளடக்கபட்டுள்ளது இதன் படி தேசிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி- தனது 17 பேர்களை கொண்ட தேசிய பட்டியலில் எம் எச் எம் , அஸ்வரையும்
ஐக்கிய தேசிய முன்னணி- தனது 9 பேர்களை கொண்ட தேசிய பட்டியலில் ஹசன் அலி , மற்றும் அஸ்லம் முஹம்மத் சலீம் ஆகிய இரண்டு முஸ்லிம்களின் பெயர்களை அறிவித்துள்ளன எனிலும் இவை இரண்டும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் சார்பாக அறிவிக்கப்பட்டவை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முஸ்லிம்கள் எவரின் பெயரும் இடம் பெறவில்லை என்பது குறிபிடதக்கது
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வை.எல்.எஸ்.ஹமீட் என்பவரை தேசிய பட்டியல் பாரளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்திருந்த போதும் குறித்த கட்சி சார்பாக எவரும் நியமிக்கப்படவில்லை
Comments
Post a Comment