அம்பாறை மாவட்டத்தில் அதிசிறப்பு சித்தி பெற்ற மாணவிக்கு பாராட்டு





அண்மையில் வெளியான க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு இராமகிருஷ்ண மிசன் பெண்கள் பாடசாலை மாணவி தேவேந்திரன் சுகன்னியா அனைத்துப் பாடங்களிலும் அதிசிறப்பு சித்தி பெற்றுள்ளார்.

இப்பாடசாலையின் வரலாற்றில் இம்மாணவியே முதற்தடவையாக அனைத்து பாடங்களிலும் அதிசிறப்பு சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இம்மாணவியை பாராட்டும் வைபவம் காரைதீவு இராமகிருஷ்ண மிசன் பெண்கள் பாடசாலையில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் கே.யோகராசா தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்திற்கு அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பொ.பியசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இவ்வைபவத்தில் புதிய பாராளுமன்ற உறுப்பினர் சமுகநேயன் பொ.பியசேன அதிபர் கே.யோகராசாவால் மாலை சூட்டப்பட்டி வரவேற்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து அதிசிறப்பு சித்தி பெற்ற சுகன்னியாவுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் நினைவுக் கிண்ணத்தை வழங்கி கௌரவித்தார்.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்