விரிவுரையாளராக தெரிவு செய்யப்பட்டால் இஸ்லாமிய உடையை தவிர்க்க தயாரா ?




பேராதனை பல்கலை கழக சமூகவியல் பீடத்திற்கு விரிவுரையாளர்களை தெரிவு செய்யும் நேர்முக தேர்வில்



பேராதனை பல்கலை கழக சமூகவியல் பீடத்திற்கு விரிவுரையாளர்களை தெரிவு செய்யும் நேர்முக தேர்வில் இஸ்லாமிய உடையான ஹிஜாப் பற்றியும் அந்த இஸ்லாமிய உடையை தவிக்க முடியுமா என்பது பற்றியும் தேர்வில் கலந்து கொண்ட முஸ்லிம் பெண்களிடம் வினவபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது

பேராதனை பல்கலை கழக சமூகவியல் பீடத்திற்கு தற்காலிக ஆங்கில , தமிழ் மொழி விரிவுரையாளர்களை தெரிவு செய்யும் நேர்முக தேர்வில் இரு முஸ்லிம் பெண்களும் ஒரு தமிழ் பெண்ணும் அழைக்கபட்டனர் நேர்முக தேர்வில் முடிவில் மேலதிக தகமையாக நிபந்தனை ஒன்றை முன்வைத்து அதற்கு தனிப்பட்ட முறையில் தீர்வுக்கு வரமுடியாவிட்டால் பெற்றோரின் சம்மதத்துடன் தெரிவித்துள்ளனர் - அந்த கேள்வி இவ்வாறு அமைந்துள்ளது 'விரிவுரையாளராக தெரிவு செய்யப்பட்டால் இஸ்லாமிய உடையை தவிர்க்க தயாரா' ? என்பதாகும்

இந்த தேர்வில் மேலதிக தகமையாக விரிவுரையாளராக தெரிவு செய்யப்பட்டால் இஸ்லாமிய உடையை தவிர்க்க தயாரா என்பதுடன் இஸ்லாமிய உடை பற்றி விளக்கம் ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது அதில் ' இஸ்லாமிய உடை முஸ்லிம் பெண்களை பிரித்து தனிமை படுத்தி வேறாக காட்டுகின்றது அவர்களின் முன் னேற்றத்துக்கு தடையாக உள்ளது பல்லின சமூகங்கள் வாழும் இந்நாட்டில் முஸ்லிம் பெண்கள் உடை அணிவதில் நெகிழ்வை கடைபிடிக்க வேண்டும் - என்று விளக்கப்பட்டுள்ளது -

இந்த தேர்வில் இரண்டு ஹிஜாப் இஸ்லாமிய உடை அணிந்த இரு முஸ்லிம் பெண்களும் , ஒரு தமிழ் பெண்னும்
கலந்து கொண்டுள்ளனர் இந்த கேள்விக்கு இரு முஸ்லிம் பெண்களும் - இந்த உடை எவரின் வற்புறுத்தல் காரணமாகவும் நாம் அணியவில்லை , பெண்கள் உடல்பாகங்களை மறைத்து உடை அணியவேண்டுமென இஸ்லாம் அறிவுறுத்தியுள்ளது , இந்த உடை எமது ஒரு சுமையல்ல இது மனநிறைவையும் பாதுகாப்பையும் தருகின்றது தொழிலுக்காக இதனை கைவிடமுடியாது என்று இவர்களின் பதில் அமைந்துள்ளது இறுதியில் இவர்கள் இருவரும் தெரிவு செய்யப்படவில்லை என்றும் - ஏற்கனவே பேராதனை பல்கலை கழக சமூகவியல் பீடத்தில் தற்காலிக விரிவுரையாலராக கடமையாற்றும் முஸ்லிம் பெண் இஸ்லாமிய உடை அணியாதவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்