கிழக்குமாகாணசபை, உள்ளுராட்சிமன்றங்களில் முறைகேடுகள்
சி.சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆட்சி நடத்தி வரும் உள்ளுராட்சி மன்றங்களில் நிதி மற்றும் நிர்வாக மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
நிதிக் கொடுக்கல் வாங்கல்களில் முறைகேடுகள், அரச வாகன துஸ்பிரயோகம், நியமனங்களில் முறைகேடு என குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் மொஹான் விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடாது தனித்து போட்டியிடத் தீர்மானித்தன் பின்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணசபையிலும் முறைகேடுகள் இடம்பெற்றுள் ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கணனிக் கொள்வனவு, தென் கொரியாவிற்கு வேலை வாய்ப்பு வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சியை கலைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இணக்கம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கிழக்கு மாகாண சபையை கலைப்பதற்கான ஆரம்ப முயற்சியாக இது இருக்கலாம் எனவும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
Comments
Post a Comment