அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வை.எல்.எஸ்.ஹமீட்டை தேசிய பட்டியல் நாடாளுமன்ற பதவிக்கு முன்மொழிவு
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வை.எல்.எஸ்.ஹமீட்டின் பெயரை தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக இன்று கல்முனை நியூஸ் இணையதளத்திடம் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
வை.எல்.எஸ்.ஹமீட் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment