ஜனாதிபதி 22ம் திகதி பாராளுமன்றில் பேசமாட்டார். ரத்தனசிறியே பிரதமர்.


ஏழாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வு எதிர்வரும் வியாழக்கிழமைஇடம்பெறவுள்ளது. இவ்வமர்வின் போது ஜனாதிபதி விசேட உரையொன்றை நிகழ்த்ததிட்டமிட்டிருந்தார். அந்நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் வியாழக்கிழமை சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பிர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொள்வர்.

அதேநேரம் புதிய பிரதம மந்திரி பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சகண்வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்துடன் கட்சியின் சிரேஸ்டஉறுப்பினர்கள் இருவர் தொடர்பாகவும் இவ்விடயத்தில் வதந்திகள்பரவியிருந்தது. அனால் முன்னாள் பிரதமர் ரத்தினசிறி விக்கிரமநாயக்கவே புதியபிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்துதெரியவருகின்றது. புதிய சபாநாயகராக ஜனாதிபதியின் சகோதரர் சமல் ராஜபக்சநியமிக்கப்படவுள்ளார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்