இவரை தாயார் தேடுகின்றார்.

கிழக்கு மாகாணம்

காரைதீவைச் சேர்ந்த 35 வயதான கந்தசாமி நிமலதாசன் என்பவர் 2007 இல் காணாமல் போயிருக்கிறார். எனினும் 2007இல் காணாமல் போன நிமலதாசன் தற்போது யாழ்ப்பாணத்தில் உலவுவதாக அவருடைய தாயாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

பிரஸ்தாப நிமலதாசனை யாழ்ப்பாணத்தில் கோயில்களிலும் பொது இடங்களிலும் கண்ட பலர் இத்தகவலை வழங்கியுள்ளனர். அவர் சற்று மூளைக்கோளாறுக்கு ஆட்பட்டிருக்கலாமெனக் கூறப்படுகின்றது. நீண்ட தாடியுடைய நிமலதாசன், நீளக் காற்சட்டை அல்லது சாரம் அணிந்து திரிவதாக தகவல் கிடைத்திருக்கிறது.

2007ல் வீட்டில் சிறு பிரச்சினை காரணமாக வேலைக்குச் செல்வதாகக் கூறி கிளிநொச்சிக்கு சென்ற அவர் பின்னர் யுத்தம் காரணமாக யாழ்ப்பணத்திற்குச் சென்றிருக்கிறார்.


இவரது தாயார் கன்னிகாவதி பொலிஸிலும், மனித உரிமை ஆணைக்குழுவிடம் ஏற்கெனவே இது தொடர்பாக முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் அவர் இருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து மூன்று தடவைகள் யாழ்ப்பாணம் சென்று கோயில் குளங்களில் நாட்கணக்கில் தேடியுள்ளார். அவரது புகைப்படத்தைக் காட்டி கேட்ட போது பலரும் அவரைக் கண்டதாகக் கூறியுள்ளனர். ஆனால், தாயாரிடம் இன்னும் அவர் அகப்படவில்லை.
இராணுவத்தினரிடமும், ஆலய நிர்வாகிகளிடமும் விசாரித்து புகைப்படத்தையும் கொடுத்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்.

யாராவது அவரைக் கண்டால் 077 4007080 என்ற தொலைபேசிக்கு தகவல் தருமாறு தாயார் கன்னிகாவதி வேண்டிக் கொண்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்