14 வயது பாடசாலை மாணவியை கற்பழித்த சீனப் பிரஜை
புத்தளம் நுரைச்சோலைப் பகுதியில் சம்பவம்
புத்தளம் மாவட்டத்திலுள்ள நுரைச்சோலைப் பகுதியில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சீனப் பிரஜையொருவர் புத்தளம் விசேட பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 14 வயதுச் சிறுமியான பாடசாலை மாணவியை கற்பழித்த குற்றத்திற்காகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் குறித்த சிறுமையை நாசுக்காக பேசி மூடிய லாரி ஒன்றினுள் ஏற்றி கற்பழித்தாக தெரிவிக்க படுகின்றது
32 வயதான இந்த சீனப் பிரஜை மின்சார தொழில் பிரிவில் வேலை செய்பவர் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் கோபமுற்றுள்ள அந்த பகுதி மக்கள் சீனர்களைத் தாக்கலாம் என்ற அச்சத்தில் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Comments
Post a Comment