அரசின் 144 ஆசனங்களுடன் மேலும் 2 ஆசனங்கள் இணைகின்றது


அரசியல் கள நிலவரம் 

அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதற்கு இன்னும் 4 ஆசனங்கள் மட்டும்தான் தேவை ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் பிளவு மேலும் இரு ஆசனங்களை அரசு பெற்று ஆசனங்களின் எண்ணிக்கையை 146 ஆக உயர்த்துகின்றது.
ஆளும் தரப்பான  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மேலும் இரு ஆசனங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்க படுகின்றதுஅரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதற்கு 150 ஆசனங்களை தனதாக்க வேண்டும்
 நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் குறிவைத்திருந்தது எனிலும்  தேசிய பட்டியலுடன் 144 ஆசனங்கள்  பெற்றுக்கொண்டுள்ள நிலையில் அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மை  பலத்தை பெறுவதற்கு இன்னும் 6 உறுப்பினர்கள் அரசுடன் இணைய வேண்டும் என்ற நிலை காணப்பட்டது இன்று கிடைக்கும் தகவல்கள் மேலும் இரண்டு  பாராளுமன்ற உறுப்பினர்கள்  ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து விலக அரசுக்கு தமது ஆதரவை வழங்கமுடிவு செய்திருப்பதாக தெரிவிக்க படுகின்றது

மனோ கணேசன் தலைமையிலான  ஜனநாயக மக்கள் முன்னணி , ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகியுள்ளதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன மனோ கணேசன் தலைமையிலான  ஜனநாயக மக்கள் முன்னணி கொழுபில் ஒரு ஆசனத்தை பெற்றுள்ளது என்பது குறிபிடதக்கது இதே வேளை தேசிய தொழிலார் அமைப்பின் தலைவர்  பழனி  திகாம்பரம்   என்ற நுவரேலியா மாவட்டத்தில்  ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் தெரிவு செய்யப்பட்ட  பாராளுமன்ற உறுப்பினரும் அரசுக்கு தனது ஆதரவை வழங்கமுடிவு செய்திருப்பதாக தெரிவிக்க படுகின்றது,  ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் மனோ கணேசன் தலைமையிலான  ஜனநாயக மக்கள் முன்னணியும் ,தேசிய தொழிலார் அமைப்பும் தேர்தலில் தலா ஒரு ஆசனத்தை பெற்று கொண்டன - இரு காட்சிகளில் பிளவுக்கும் தேசிய பட்டியல் உறுப்புரிமை காரணம் என தெரிவிக்க படுகின்றது

அரசு தமிழ் , முஸ்லிம் கட்சிகளுடன் ஆதரவு இன்றி  உறுபினர்களை பெற்று கொள்வதில்  அரசு வெற்றி  பெறுமானால்  சிறுபான்மை தமிழ் , முஸ்லிம் கட்சிகள் செல்லாத காசுகளாகி  விடும்

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது