மேமாதம் முதலாம்திகதி முதல் தனியார் பஸ்களில் பிச்சை எடுப்பதும் வியாபாரம் செய்வதும் முற்றாகத் தடை
மேமாதம் முதலாம்திகதி முதல் தனியார் பஸ்களில் பிச்சை எடுப்பதும் வியாபாரம் செய்வதும் முற்றாகத் தடைதனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்று தெரிவித்துள்ளார். இந்த முடிவு குறித்து பொலிஸ் மா அதிபரையும் போக்குவரத்து அமைச்சையும் அறிவூட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பஸ்ஸினுள் பிச்சை எடுப்பதாலும் வியாபாரம் செய்வதாலும் பயணிகளுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதாகக் கூறிய அவர், பஸ்களில் பிச்சை எடுப்பதன்மூலம் 4 ஆயிரம் ரூபா முதல் 5 ஆயிரம் ரூபாவரை ஒரு பிச்சைக்காரர் வருமானம் ஈட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். பிச்சை எடுப்பதன் பின்னணியில் சில கும்பல்கள் இயங்குவதாகவும், இதனை தடுப்பதன்மூலம் குறித்த கும்பல்களால் அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என்றும் கூறிய அவர், அது தொடர்பில் பொலிஸாரின் உதவியை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment