அரசியலிலும் ,மக்களோடும் தொடர்ந்து இருக்க பேரியல் அஸ்ரப் முடிவு
கடந்தநாடளுமன்றத் தேர்தலில் தன்னால் வெற்றியடைய முடியாத நிலை ஏற்பட்ட போதும்,அரசியல் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடவிருப்பதாக முன்னாள் அமைச்சர்பேரியல் அஷ்ரப் கல்முனை நியூஸ் இணையத்தளத்திற்கு சற்று முன் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் வெளிநாட்டு உயர்ஸ்தானிகராகநியமிக்கப்படவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுசம்பந்தமாக கல்முனை நியூஸ் இணையத்தளம் அவரிடம் வினவியது. இதற்குப் பதிலளித்த அவர்,வெளிநாட்டு உயர்ஸ்தானிகர் பதவி எதனையும் தான் அரசிடம் கோரவில்லையென்றும்
இது சம்பந்தமாக தனக்கு உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த பொதுதேர்தலில் மக்கள் தன்னை தெரிவு செய்யாத போதிலும் கூட அவர்களைவிட்டு ஒதுங்கியிருக்க தான் தயாரில்லை என்றும், தொடர்ந்து மக்களுக்குசேவையாற்றவிருப்பதாகவும் பேரியல் அஷ்ரப் குறிப்பிட்டார்.
Comments
Post a Comment