மயோன் முஸ்தபாவிற்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல்.


நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் பொன்சேகாவிற்கு வெற்றியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் முன்னாள் அமைச்சரான மயோன் முஸ்தபா, ஜாதிக்க நிதாகஸ் பெரமுன வின் முன்நிலை உறுப்பினரும் முன்னாள் பாராளுன்ற உறுப்பினருமான முஸம்மிலுக்கு 43 லட்சம் ரூபா லஞ்சம் வழங்க முற்பட்டார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். மயோன் முஸ்தபாவின் இச்செயற்பாடானது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அமைந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கின் ஆதாரங்களாக தொலைபேசி உரையாடல்களுக்கான ஒலிப்பதிவுகள் மற்றும் சந்திப்புக்களுக்கான வீடியோ பதிவுகள் என்பன நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளதுடன் சாட்சிகளாக 21 பேரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று