புதிய சபாநாயகராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளார்?
நாடாளுமன்றின் பிரதி சபாநாயகர் பதவி மீண்டும் பிரியங்கர ஜயரட்னவிற்கு வழங்கப்படவுள்ளது. கடந்த இரண்டு தடவைகள் சபாநாயகர் பதவி ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கப் பெற்றதனால் இம்முறை ஆளும் கட்சிக்கு வழங்குவதில் தடையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமரர் அனுர பண்டாரநாயக்க, ஜோசப் மைக்கல் பெரேரா, டபிள்யூ.ஜே.எம். லொக்கு பண்டார ஆகியோர் கடந்த காலங்களில் சபாநாயகர் பதவியை வகித்தனர். எதிர்வரும் 22ம் திகதி நாடாளுமன்றம் கூடியதன் பின்னர் சபாநாயகர் தெரிவு நடைபெறவுள்ளது. |
Comments
Post a Comment