கிழக்கு மாகாண முதலமைச்சர் அடுத்த மாதம் இந்தியா விஜயம்!
இந்திய வெளியுறவு செயலாளர் நிரூபமா ராவின் அழைப்பை ஏற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் அடுத்த மாதம் இந்தியா செல்லவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானா கல்முனை நியூஸ் இணையதளத்திற்கு தெரிவித்தார். இந்த விஜயத்தின் போது இந்திய அரசாங்கத்தின் பல்வேறு உயர் மட்ட பிரதிநிதிகளை முதலமைச்சர் சந்திக்கவிருப்பதாகவும் தற்போது கட்சியின் கொள்கைகள் மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அண்மையில் இந்திய வெளியுறவு செயலாளர் நிரூபமா ராவ் இலங்கை வந்திருந்த வேளை சந்திரகாந்தனை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. |
Comments
Post a Comment