முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற பதவி சுழற்சி முறையில் பகிரப்படும்?



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி சுழற்சி அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்துள்ள இரண்டு ஆசனங்களில் ஒன்று கிழக்கிலும் மற்றையது மேல் மாகாணத்திலும் சுழற்சி அடிப்படையில் பகிரப்படும் என தெரியவருகின்றது.

தற்பொழுது களுத்தறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவி எதிர்காலத்தில் கொழும்பு, கம்பஹா, குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கும் மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அட்டாளைச்சேனை, ஓட்டமாவடி, மூதூர் ஆகிய பிரதேசங்களுக்கும் பகிரப்படும்.

இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசனலியிடம் கல்முனை நியூஸ் இணையம் வினவியபோது, முதற்கட்டமாக கட்சியின் சிரேஷ்டத்துவம் மற்றும் கட்சிக்கு மிக நம்பிக்கைகுரியவர்கள் என்றடிப்படையில் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், கட்சியின் உயர் பீடம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமச் செய்ய வேண்டிக் கொள்ளும் போது தாங்கள் இருவரும் இராஜினாமச் செய்ய தயார் என்றார் ஹசனலி.

இதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தேசிய பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த தனக்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மிக விரைவில் வழங்குவதாக கட்சித் தலமைத்துவம் தனக்கு உறுதியளித்திருப்பதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

இதே வேளை இன்று அட்டளைச்சேனை பிர தேசத்தில் மசூர் சின்ன லெப்பையின் ஆதரவாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது