சாய்ந்தமருது பகுதியில் மீண்டும் சோதனைச் சாவடி
அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் மீண்டும் சோதனைச் சாவடியொன்று முளைத்திருப்பதால் அப்பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கடந்த காலங்களிலும் சாய்ந்தமருது கல்முனைக்குடி பிரதான வீதிகளில் பல்வேறு இடங்களில் பொலீஸ் சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டு அவை மக்களின் எதிர்ப்பினால் அகற்றப்பட்டன. ஆனால், மீண்டும் இப்பிரதேசங்களில் பொலீஸ் சோதனைச் சாவடி நிறுவப்பட்டிருப்பதால் வேதாளம் முருங்கை மரமேறிய கதையாய் பிரதேச மக்கள் பல்வேறு இடைஞ்சல்களுக்கு உள்ளாகிவருகின்றனர். எனவே குறித்த சோதனைச் சாவடியை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரியுள்ளனர்.
Comments
Post a Comment