கல்முனை மாநகர பிரதி மேயராக நற்பிட்டிமுனை தௌபீக்?
கல்முனை மாநகர பிரதி மேயராக நட்பிட்டிமுனையை சேர்ந்த மாநகர சபை உறுப்பினர் உதுமா லெப்பை தௌபீக் நியமனம் செயப்படவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொது தேர்தல் காலத்தில் வாக்களித்த பிரகாரம் நற்பிட்டிமுனை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை கேட்டுள்ளனர்.
இது தொடர்பாக பேசுவதற்கு மாநகர சபை உறுப்பினர் தௌபீக் தலமையிலான குழுவினர் ரவூப் ஹக்கீமை சந்திக்க சென்றுள்ளனர்.
இதே வேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீடத்தினால் பிரதி முதல்வராக நியமனம் செயப்பட்டிருக்கும் சாய்ந்தமருதை சேர்ந்த மாநகர சபை உறுப்பினர் எ.பசீர் முடியும் என்றால் என்னை தவிர வேறு ஒருவருக்கு கொடுத்து பார்க்கட்டும் என சவால் வித்துள்ளார்.
நட்பிட்டிமுனைக்கு பிரதி முதல்வர் பதவி வழங்கப்படாதவிடது முஸ்லிம் காங்கிரசில் ஒட்டிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை என தௌபீகின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment