சமைத்த உணவு நச்சுத் தன்மை14 பேர் வைத்தியசாலையில்
சாப்பிட்ட உணவு நச்சுத் தன்மையடைந்ததனால் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
ஏறாவூர்சதாம் ஹுசைன் ஸைன் மாதிரிக் கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் ஏறாவூர் மாவட்டவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக மாவட்ட வைத்தியதிகாரிஏ.சீ.எம்.பழில் தெரிவித்துள்ளார்
பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் சிறுவர்களும் 7 பெண்களும் அடங்குவர்.
குடும்ப உறவினர்கள் ஒன்றிணைந்து ஒரே இடத்தில் சமைத்து சாப்பிட்டுள்ளனர்
இவர்களுக்குசற்று நேரத்தில் வயிற்று நோவும், வாந்தி, தலைசுற்று மயக்கம் ஏற்பட்டதாகதெரிவிக்கபட்டுள்ளதாகவும் இதையடுத்து இவர்கள் அயலவர்களினால்வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்
சமைத்தஉணவு நச்சுத் தன்மையடைந்ததனால் இப்பாதிப்பு ஏற்றபடடுள்ளதாக வைத்தியதிகாரிகுறிப்பிட்டார்
Comments
Post a Comment