அழைப்பு விடுக்கப்பட்டால் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து கொள்ள வேன்டும் -அஷ்ஷெய்க் மஸீத்தீன் இனாமுல்லா


தேர்தல்களுக்காகமுஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் கூட்டு உடன்பாடுகளை எந்தவொரு தேசியகட்சியுடனும் செய்து கொள்வது காலா காலம் ஒரு கட்சியிடம் சரணாகதிஅடைவதற்கல்ல. மாறாக தாம் ஆதரவளித்த தேசிய கட்சி அரசமைக்க தவறும்பட்சத்தில் நிபந்தனைகளின் அடிப்படையில் ஆளும் அரசிற்கு ஆதர்வளிப்பதன்மூலம் சமூக நலன்களை காப்பதற்கான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். இன்றுநாட்டில் பலம் வய்ந்த அரசு ஆட்சி பீடம் ஏறியுள்ளது,போருக்கு பின்னரானபுதிய அரசியல் களநிலவரங்களை சரியாக கையாள்வதற்கான சரியானமுன்னெடுப்புக்களை ஜனதிபதி தேர்தலுக்கு முன்பிருந்தே முஸ்லிம் காங்கிரஸ்எடுக்கத் தவறி விட்டது என்பதனை பல தடவைகள் சுட்டிக் காட்டியிருந்தோம்.மூன்றிலொரு பெரும்பான்மையுடன் தேர்தல் முறை மறுசீரமைப்பு, அரசியலமைப்புசீர்திருத்தம்,அரசியல் தீர்வொன்றிற்கான முன்னெடுப்புக்கள் என பல வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகள் விரைவில் மெற்கொள்ளப்படவுள்ளநிலையில் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க் கட்சியிலிருந்து கொண்டு வெறும்பார்வையளராக இன்னும் பல தசாப்தங்களை கடத்தி விடக்கூடாது. திருப்திகரமானஅமைச்சுப்பதவிகள்,கவற்சிகரமான் பதவிகள் குறித்த இழுபறிகளுக்கப்பால் சமூகம்சார்ந்த தெளிவான உடன்பாடுகளுடன் ஜனாதிபதியிற்கும் அரசிற்கும் முஸ்லிம்காங்கிரஸ் ஆத்ரவளிக்க முன்வருவதன் மூலமே எமது பொது இலக்குகளை அடைந்துகொள்ளலாம். தவறும் பட்ச்த்தில் கட்சி மீண்டும் ஒரு முறை சின்னாபின்னப்படுவதனை எவராலும் தடுக்க முடியாது போய்விடும்.
அஷ்ஷெய்க் மஸீத்தீன் இனாமுல்லா
முன்னாள் தலைவர்- மஜ்லிஸ் அல்-ஷுரா,அரசியல் அதியுயர்பீட உறுப்பினர் -முஸ்லிம் காங்கிரஸ் &
முன்னால் சவூதி அரேபியாவுக்கான கொன்ஸல் ஜெனரல்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்