Posts

Showing posts from June, 2010

கல்முனை அஸ்ரப் வைத்திய சாலையில் சுகாதாரக் கண்காட்சி

Image
 போசாக்கு மாத  வைபவம்  கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையின் பொதுச் சுகாதாரப் பிரிவு ஏற்பாடு செய்த சுகாதாரக் கண்காட்சியும் சுகி நூல் வெளியீட்டுவிழாவும் வெள்ளியன்று நடை  பெற்றது. வைத்திய அத்தியட்சகர்  எ.எல்.எப்.ரகுமான் தலைமையில் நடை பெற்ற வைபவத்தில் கல்முனை மாநகர முதல்வர்.எஸ்.இசட்.எம்.மசூர் மௌலானா பிரதம அதிதியாகவும் , பிரதி முதல்வர் எ.பசீர் ,உட்பட மற்றும் பலரும் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.  

கல்முனை கார்மேல் பற்றிமாவில் போசாக்கு மாதம் அனுஷ்டிப்பு

Image
கல்முனை கார்மேல் பற்றிமாவில் போசாக்கு மாத நிகழ்வுகள் இன்று இடம் பெற்றது. பிரதி அதிபர் அருட் சகோதரி எம்..சுதர்ஷினி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மாணவிகளுக்கு இலைக்கஞ்சி வழங்கப்பட்டது. ஆசிரிய,ஆசிரியைகளும் ,மாணவிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

கலாநிதி சபீனா இம்தியாஸ் முதல் முஸ்லிம் பெண் பீடாதிபதியாக நியமனம்

Image
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட பீடாதிபதியாக கலாநிதி சபீனா இம்தியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.   அம்பாறை மாவட்டத்தில் கலாநிதி பட்டம் பெற்ற முதல் முஸ்லிம் பெண்மணி மற்றும் முதல் முஸ்லிம் பெண் பீடாதிபதி என்ற பெருமை இவரையேசாரும். கலாநிதி சபீனா இம்தியாஸ் பீடாதிபதியாக நியமிக்கப்பட முன்னர் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முக்கிய பல பதவிகளில் பணியாற்றியுள்ளார். கல்முனையை பிறப்பிடமாக கொண்ட சபீனா இம்தியாஸ், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மற்றும் பேராதனை பல்கலைக்கழம் என்பவற்றின் பழைய மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் ஆசிரியர் ஆளணியைச் சமப்படுத்த நடவடிக்கை!

Image
கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர் ஆளணியை சமப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. சில பாடசாலைகளில் மேலதிகமான ஆசிரியர்கள் காணப்படுகின்றனர். சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் குறைவாகக் காணப்படுகின்றனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இதனை சீர்செய்து சமப்படுத்துவதற்கான நட வடிக்கையை மேற்கொள்வதற்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் இது தொடர்பான விவரங்களை சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களிடமும் கோரியுள்ளார். ஒரே பாடசாலையில் 8 வருடங்களுக்கு மேல் கடமையாற்றும் ஆசிரியர்கள் இம் மாதம் இறுதிக்குள் வலயத்திலுள்ள ஆசிரியர் பற்றாக் குறையாகவுள்ள வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். அத்துடன், வெளிவலயப் பாடசாலைகளுக்கிடையிலான இடமாற்றம் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் இடம்பெறும் என மாகாணப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் தெரிவித்துள்ளார். ஆசிரிய சேவை நியமனத்தின் போது, குறித்த பாடசாலைகளில் காலத்தை முடிக்காமல் இடமாற்றம் பெற்றவர்கள் மீண்ட...

ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப்

Image
அம்பாறை மாவட்டத்தில் உள்ள தேர்தல் தொகுதிகளுக்கு ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்களாக பலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.நெளசாட், அம்பாறை மேற்கு தொகுதி அமைப்பாளராக நாடாளுன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரேசகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இதேவேளை, ஸ்ரீலங்கா சுகந்திர கட்சி, அம்பாறை மாவட்ட அமைப்பாளராக சட்டத்தரணி அன்வர் சியாத் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரான நாடாளுன்ற உறுப்பினர் சரத் வீரேசகரவின் ஒருங்கிணைப்பு செயலாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் நியமிக்கப்படவுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் லிபியா சென்றுள்ளதால் இன்றைய நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை

நாளை மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியின் புதிய கட்டிட திறப்பு விழா

Image
மருதமுனை ஸம்ஸ்  மத்திய கல்லூரியின் புதிய கட்டிட திறப்பு விழா நாளை காலை 10.00 மணிக்கு இடம்பெறவிருப்பதாக கல்லூரி அதிபர் எஸ்.எல்.எம். ஜலாலுதீன்  கல்முனை நியூஸ் இணையதளத்திற்கு தெரிவித்தார். மேலும், இப்பாடசாலையின் மீள் கட்டுமான பணிகளுக்கு முழுமையான நிதியுதவியை யுனிசொப் நிறுவனம் வழங்கியதாக அவர் குறிப்பிட்டார். நாளை இடம்பெறவுள்ள திறப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக யுனிசொபின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி பிலிப்பே டுஆ முல்லே மற்றும் விசேட அதிதியாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.டி.நிஸாம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.  கடந்த 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தின் போது மருதமுனை ஸம்ஸ்  மத்திய கல்லூரி முழுமையான சேதத்திற்குள்ளானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை கல்முனையில் சுனாமி வீடுகள் பகிர்வு

Image
கல்முனை பிர தேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்முனை குடியில் சுனாமியால் வீடிழந்த மக்களுக்கு  கல்முனை இரவேளிக்கன்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டது. அம்பாறை மேலதிக அரச அதிபர் திருமதி தர்சினி பிரசாந்த் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சீட்டிழுப்பு மூலம் வீடுகள் பகிரப்பட்டன.

47 வருடங்கள் பழைமை வாய்ந்த மருதமுனை தபால் நிலையத்துக்கு நிரந்தர கட்டிடம் வேண்டும்!பொதுமக்கள் கோரிக்கை

Image
அம்பாறை மாவட்டத்தின் சுமார் 47 வருடம் பழைமை வாய்ந்த மருதமுனை தபால் நிலையத்துக்கு நிரந்தர கட்டிடம் அமைக்கப்படவேண்டுமென மருதமுனைப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 1963 ஆம் ஆண்டு மருதமுனைப் பிரதான வீதியில் வாடகைக் கட்டிடத்தில் ஓர் உப தபால் நிலையமாக இந்த தபால்நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இது 33ஆண்டுகளுக்குப் பின்னர் 1996.08.30ஆம் திகதி 2ஆம் தர தபால் நிலையமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. எனினும், இன்றுவரை வாடகைக் கட்டிடத்திலேயே இத்தபால் நிலையம் இயங்கி வருவது கவலைக்குரியதாகும். இந்தத் தபால் நிலையத்தின் கீழ் இரண்டு உபதபால் நிலையங்கள் உள்ளன. அவை பெரிய நீலாவணையிலும் அக்பர் கிராமத்திலும் இயங்கிவருகின்றன. 11 கிராம சேவையாளர் பிரிவுகளில் சுமார் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட இக்கிராமத்தில் 6 பாடசாலைகள், 14 பள்ளிவாசல்கள், 2 வங்கிகள், 15 இற்கு மேற்பட்ட விளையாட்டுக் கழகங்கள், ஒரு காதி நீதிமன்றம் ஆகியவை உட்பட நூற்றுக்கு மேற்பட்ட வர்த்தக நிலையங்களும் பல சமூக சேவை அமைப்புக்களும் உள்ளன. இந்த தபால் நிலையத்தில் தினமும் சராசரியாக...

அம்பாறை மாவட்ட நெல் வயல்களில் புதுவகையான நோய் "விவசாய திணைக்களம் திண்டாட்டம் "

Image
   அம்பாறை மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட சிறுபோக நெற்செய்கைக்கு பரவிவரும் புது வகையான நோய் காரணமாக சுமார் 700 ஏக்கர் நெல்வயல்கள் அழிவடையும் நிலையிலுள்ளன. சிறுபோக நெற்செய்கை பண்ணப்பட்டு அறுவடைக்கு இன்னும் 3 வாரங்களேயுள்ள நிலையில், இவ்வாறான நோய்த் தாக்கத்திற்கு வயல்கள் உள்ளாகியுள்ளன. மேற்படி நோய் தொடர்பில் ஆராய்வுகளை மேற்கொள்ளவென நோய்த் தாக்கத்திற்குள்ளான நெற்கதிர்களின் மாதிரிகளை கண்ணொருவ விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் உயர் விவசாய அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.

திங்கள் கல்முனையில் வீடுகள் கையளிக்கப்படுமா?

Image
கல்முனையில்சுனாமியால் பாதிக்கப்பட்டு கடந்த 5 வருடங்களாக தகரக் கொட்டில்களில் வாழ்ந்து வந்த மக்களுக்கான நிரந்தர வீடுகள் அமைக்கப்பட்டுவருடமாகின்ற போதிலும் இன்னும் கையளிக்கப்டவில்லை . அற்றைக்கையளிக்குமாறுகோரி கடந்த புதனன்று   பிரதேசசெயலகம் ; முன்னால் ஆப்ப்பாட்டம் நடாத்தியபோது   திங்கட்கிழமை அவை வழங்கப்படுமென்று உறுதியனிக்கபட்டது . அவை  திங்கள்கிழமை கையளிக்கப்படுமா ? அவர்கள் ஆர்ப்பாட்டம் நடாத்துவதையும் அவர்களுக்கென கட்டப்பட்ட வீடுகளையும் படங்களில் காணலாம்  

கல்முனையில் மேசைப் பந்து மற்றும் சதுரங்கம்

Image
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடாத்தும் விளையாட்டுப் போட்டிகளின் ஒரங்கமாக மேசைப் பந்து மற்றும் சதுரங்கம் ஆகிய விளையாட்டுகள் கல்முனை சாகிறாக் கல்லூரியில் நடாத்தப்பட்து . அங்   கு கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி ; சிவப்பிரகாசம் தேசியக்கொடியை ஏற்றுவதையும்   கல்லூரி அதிபர் மர்சூனா எ.காதர் அருகில் நிற்பதையும், மூவின மாணவர்களும் போட்டியில் பங்கேற்பதையும் படங்களில் காணலாம்

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சாதனை படைத்தோருக்கு துறை நீலாவணை மகாவித்தியாலயத்தில் பாரிசளிப்பு விழா

Image
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள துறைநீலாவணை மகா வித்தியாலயத்தில் கடந்த க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் பெற்ற மாணவிக்கும் விஷேட சித்திகளைப் பெற்ற ஏனைய மாணவர்களுக்கும் பரிசளிப்பு வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு பாடசாலையின் அதிபர் எஸ்.விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவும், கௌரவ அதிதிகளாக சமாதான நீதவான் தொழிலதிபர் தேசமானி எம்.இராஜேஸ்வரன், தென்கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட விரிவுரையாளர் சுஜா ராஜினி வரதராஜன், தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில ஒருவரும். காரைதீவு நலன்புரி அமைப்பின் போசகருமான செ. இராசையா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இவர்கள் மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தனர். இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசாவுக்கு அவரின் சேவைகளைப் பாராட்டி இப் பாடசாலையின் அதிபர், பாடசாலையின் அபிவிருத்திச் சங்க செயலாளர் செ. பேரின்பராசா ஆசியர் ஆகியோர் பொன...

கல்முனை திரு இருதய நாதர் ஆலய திரு விழா

Image
கல்முனை திரு இருதய நாதர் ஆலய திரு விழா  வெள்ளிக்கிழமை நடை பெற்றது. ஆலய பங்குத் தந்தை அருட் தந்தை ஜூட் ஜோன்சன்  தலைமையில் நடை பெற்ற விழாவில் திருப்பலி பூசை,திருச் சொருப பவனி என்பன இடம் பெற்றது.

மட்டக்களப்பு படமாளிகை தீக்கிரை

Image
மட்டக்களப்பில் அமைந்துள்ள பிரபல சினிமா படமாளிகை ஒன்றிற்கு இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர். மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியிலுள்ள படமாளிகையே தீக்கிரையாகியுள்ளது. இன்று அதிகாலை ஒரு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஐபா திரைப்பட விழாவை தமிழ் திரையுலக நடிகர்கள் புறக்கணித்தமையைக் கண்டித்து இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை வடகிழக்கு சினிமா திரையரங்குகளில் இந்தியத் தமிழ் திரைப்படங்களை வெளியிட வேண்டாம் என சுதந்நிர இலங்கையின் தமிழர்கள் அமைப்பு துண்டுப்பிரசுரம் மூலம் வேண்டுகோள் விடுத்தது. இந்நிலையில் இன்று ராவணா திரையிடப்பட்டிருந்த நிலையிலேயே குறிப்பிட்ட படமாளிகை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரன் விஜயம் செய்தார். இச் சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று இடம்பெற்ற யுத்த வெற்றிக் கொண்டாட்டஇராணுவ அணிவகுப்பு மரியாதையில் ஜனாதிபதி

Image
இன்று இடம்பெற்ற யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கலந்து கொண்டார். இங்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றன. வாகனத்தில் பயணித்த வண்ணம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை இடம்பெறுவதை படத்தில் காணலாம்.

நாளை அரச மற்றும் வங்கி விடுமுறை

Image
இயற்கையின் சீற்றத்தினால் நடத்த முடியாமல் குழம்பி போன இராணுவ வெற்றி விழாவினை மீண்டும் வரும் 18 ஆம் திகதி நடாத்த அரசாங்கம் தீர்மானித்தது. இதனால் நாளைய தினம் அரச மற்றும் வங்கி விடுமுறை தினமாக அரசு பிரகடணப்படுத்தியுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கல்முனை அகதிகளுக்கு திங்கள் வீடு கையளிப்பு

Image
சுனாமியால் வீடிழந்த கல்முனை குடியை சேர்ந்த 456  குடும்பங்களுக்கு கல்முனை இறைவெளி கண்டத்தில் அமைக்கப் பட்டுள்ள வீடுகள் எதிர் வரும் திங்கட் கிழமை கையளிப்பு செயப் படவுள்ளது. கல்முனை பிர தேச செயலகத்துக்கு முன்பாக புதன் கிழமை இடம் பெற்ற மறியல் போராட்டத்தை அடுத்து  அரசாங்க அதிபரினால் இந்த முடிவு எடுக்கப்பட்டு  கல்முனை பிர தேச செயலாளர் ஊடாக  பாதிக்கப்படடவர்களுக்கு   எழுத்து மூலம்  தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதனை அடுத்து கல்முனை பிர தேச செயலகத்துக்கு முன்பாக புதன் கிழமை இடம் பெற்ற மறியல் போராட்டம் கை விடப்பட்டுள்ளதாக கல்முனை பிர தேச செயலாளர் எம்.எம்.நௌபல் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மறியல் போராட்டம்

Image
கல்முனை குடியில் சுனாமியால் வீடிழந்த மக்களுக்கு கல்முனை இறைவெளி கண்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் 456 வீடுகளையும் பகிர்ந்தளிக்குமாறு கோரியே இந்த மறியல் போராட்டம் நடை பெறுகிறது. அரசாங்க அதிபர் வருகை தந்து  உறுதியான முடிவு தரும் வரை இப்போராட்டம்  தொடருமென் பாதிக்கப்பட்டுள்ளவர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு புதிய கட்டிடம். SB அடிக்கல்லை நட்டுவைத்தார்.

Image
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்திற்கான புதிய கட்டிடத்தொகுதி ஒன்று அமைக்கப்படவுள்ளது. இக்கட்டத்திற்கான அடிக்கல்லினை உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க நட்டு வைத்தார். உயர் கல்வி அமைச்சர் புதிய கட்டடத் தொகுதிக்கான அடிக்கல்லை நட்டுவைத்து நினைவுப் படிபக்கல்லைத் திரைநீக்கம் செய்துவைப்பதையும் மாணவர்களுடன் அளவளாவி குறைநிறைகளை அறிவதையும் அருகில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி இஸ்மாயில் முன்னாள் பா.உ. எம்.நௌஸாட் உள்ளிட்டடோர் நிற்பதையும் படங்களில் காணலாம்.

கல்முனையில் மற்றுமொரு கடை கொள்ளை

Image
கல்முனை பொலிஸ் பிரிவில் கல்முனைக்குடி காசீம் வீதியில்  உள்ள  பல சரக்கு வியாபார நிலையம் நேற்று இரவு கொள்ளையிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

உலக இரத்ததான தினம் World Blood Donor Day - நிகழ்வு கல்முனையில்

Image
உலக இரத்ததான தினம் World Blood Donor Day (recognized by the UN) ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது. இரத்தப் பிரிவுகளான A B O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் Karl Landsteiner பிறந்த தினத்திலே இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் நடை பெற்ற வைபவத்தில் அம்பாறை,கல்முனை,அக்கரைப்பற்று,மகா ஓயா  பிர தேசங்களில் இரத்த தானம் செய்த  நூற்றுக்கும் மேற் பட்டவர்களுக்கு கௌரவம் வழங்க்கப்பட்டது. இந்த நிகழ்வில்  கல்முனை வைத்திய அத்தியட்சகர் டாக்டர்.எ.எல்.எப்.ரகுமான் உட்பட வைத்திய அதிகாரிகளும் ,மத தலைவர்களும் ,கல்முனை மாநகர ஆணையாளர் எம்.வை.சலீம் உட்பட கல்முனை,சாய்ந்தமருது  பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சுனாமி எச்சரிக்கை கல்முனை கரையோர மக்கள் இடம் பெயர்வு

Image
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதயடுத்து   கல்முனை,மருதமுனை,கல்முனைக்குடி ,சாய்ந்தமருது பிர தேச  கரையோர மக்கள் பாதுகாப்பு தேடி உறவினர் வீடுகளுக்கு படையெடுத்தனர் .மக்கள் வெளியேறிய  பகுதிகளில் பொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் பாது காப்பு கடமையில் ஈடுபட்டனர்.

இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை

Image
நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் இடம்பெற்ற 7.7 ரிச்டர் அளவிலான பூமிஅதிர்வினால் இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதி மக்களை அவதானத்துடன் இருக்குமாறு வானிலை அவதான நிலையம் வேண்டுகோள்.

கல்முனையில் துப்பாகியுடன் ஒருவர் கைது நீண்ட நாள் தேடப்பட்டவர்

Image
கல்முனை பொலிசார் தகவல் கல்முனையில் இடம்பெற்ற பல் வேறு  பட்ட குற்ற செயல்களுடன் தொடர்பு  பட்டவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் கல்முனை பிர தேசத்தில் வைத்து இன்று கைது செயப்பட்டுள்ளார். இவரிடமிருந்து  T-56 ரகத்தை சேர்ந்த துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவரிடம் சிவில் பாதுகாப்பு குழு அடையாள அட்டை இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் நியமனம்;ரணிலிடம் ஹக்கீம் அதிருப்தி

Image
கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் நியமனம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கரமசிங்ஹவைச் சந்தித்து தமது அதிருப்தியை தெரிவித்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்  கல்முனை நியூஸ் இணையதளத்திற்கு தெரிவித்தார். இந்த நியமனம் தொடர்பில் ஐக்கியத் தேசியக் கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் கலந்துரையாடாது தன்னிச்சையாக தீர்மானம் எடுத்தமை தொடர்பில் கவலை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், இது ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான புரிந்துணர்வை பாதிக்கும் விடயம். இது சம்பந்தமாக விரைவில் இரு கட்சிகளும் இணைந்து நல்லதொரு தீர்மானத்தை எடுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கூறினார். இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான  கரு ஜெயசூரிய மற்றும் ஜோன் அமரதுங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இவ்விடயம் சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் விரைவில் கூடி தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி செயலாளர் நாயகம் கல்முனை ந...

கல்முனையில் முன்னோடிப் பரீட்சை

Image
கல்முனை கனடா ரோஸ் ஷரிட்டி நிறுவனத்தின்   உதவியுடன் கல்முனை கல்வி வலயம் ஏற்பாடு செய்த தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இன்று முன்னோடிப்  பரீட்சை நடாத்தப் பட்டது.  கல்முனை கல்வி வலயத்தில் உள்ள 2879 மாணவர்களுக்கு 18 நிலையங்களில் இப்பரீட்சை நடை பெற்றது. மாணவர்களுக்கான பரீட்சை பயம்,பரீட்சை ஒன்றுக்கு எவ்வாறு முகம் கொடுத்தல் போன்ற விடயங்களை முன்கூட்டி மாணவர்களுக்கு அறியச் செயயும் வகையில்  இப்பரீட்சை நடை பெற்றது. வலய கல்விப் பணிப்பாளர் எம்.டி.தௌபீக் பரீட்சை நிலையங்களுக்குச் சென்று பார்வை இட்டார். இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தால் நடாத்தப் படுவது போன்று நடாத்தப்பட்டது.

கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவராக தயா கமகே நியமனம் முஸ்லிம் காங்கிரஸுக்கு தெரியாதாம்!

Image
கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவராக தயா கமகே ஐக்கிய தேசிய கட்சியால் நியமிக்கப்பட்டமை சம்பந்தமாக எதுவும் தெரியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் கல்முனை நியூஸ்  இணையதளத்திற்கு தெரிவித்தார். கடந்த மாதம் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடனான கூட்டத்தில், எதிர்க்கட்சித்தலைவர் நியமனம் சம்பந்தமாக  ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்ஹவுடன்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துரையாடுவதாக தீர்மானிக்கப்பட்டது. எனினும் அவர்கள் இருவருக்கும் இடையில் இது சம்பந்தமான கலந்துரையாடல் இடம்பெறவில்லை  என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி . மேலும், இது சம்பந்தமாக ஐக்கிய தேசிய கட்சி  எவ்வித பேச்சுவார்த்தையிலும் முஸ்லிம் காங்கிரஸுடன் ஈடுபட்டாமல் நியமித்துள்ளது. இவ்விடயம் சம்பந்தமாக அடுத்த வாரம் நடைபெறவுள்ள அதியுயர் பீட கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று  முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார். கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவராக தயா கமகே...