கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவராக தயா கமகே நியமனம் முஸ்லிம் காங்கிரஸுக்கு தெரியாதாம்!
கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவராக தயா கமகே ஐக்கிய தேசிய கட்சியால் நியமிக்கப்பட்டமை சம்பந்தமாக எதுவும் தெரியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் கல்முனை நியூஸ் இணையதளத்திற்கு தெரிவித்தார்.
கடந்த மாதம் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடனான கூட்டத்தில், எதிர்க்கட்சித்தலைவர் நியமனம் சம்பந்தமாக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்ஹவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துரையாடுவதாக தீர்மானிக்கப்பட்டது.
எனினும் அவர்கள் இருவருக்கும் இடையில் இது சம்பந்தமான கலந்துரையாடல் இடம்பெறவில்லை என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி .
மேலும், இது சம்பந்தமாக ஐக்கிய தேசிய கட்சி எவ்வித பேச்சுவார்த்தையிலும் முஸ்லிம் காங்கிரஸுடன் ஈடுபட்டாமல் நியமித்துள்ளது. இவ்விடயம் சம்பந்தமாக அடுத்த வாரம் நடைபெறவுள்ள அதியுயர் பீட கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவராக தயா கமகே நியமிக்கப்பட்டமை கல்முனை நியூஸ் இணையத்தளம் தன்னிடம் தொடர்புகொண்டு கேட்ட போதே இவ்விடயம் தெரியவந்ததாக ஹசன் அலி தெரிவித்தார்.
Comments
Post a Comment