உலக இரத்ததான தினம் World Blood Donor Day - நிகழ்வு கல்முனையில்

உலக இரத்ததான தினம் World Blood Donor Day (recognized by the UN) ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது. இரத்தப் பிரிவுகளான A B O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் Karl Landsteiner பிறந்த தினத்திலே இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் நடை பெற்ற வைபவத்தில் அம்பாறை,கல்முனை,அக்கரைப்பற்று,மகா ஓயா  பிர தேசங்களில் இரத்த தானம் செய்த  நூற்றுக்கும் மேற் பட்டவர்களுக்கு கௌரவம் வழங்க்கப்பட்டது.

இந்த நிகழ்வில்  கல்முனை வைத்திய அத்தியட்சகர் டாக்டர்.எ.எல்.எப்.ரகுமான் உட்பட வைத்திய அதிகாரிகளும் ,மத தலைவர்களும் ,கல்முனை மாநகர ஆணையாளர் எம்.வை.சலீம் உட்பட கல்முனை,சாய்ந்தமருது  பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்