கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் நியமனம்;ரணிலிடம் ஹக்கீம் அதிருப்தி

கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் நியமனம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கரமசிங்ஹவைச் சந்தித்து தமது அதிருப்தியை தெரிவித்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்  கல்முனை நியூஸ் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

இந்த நியமனம் தொடர்பில் ஐக்கியத் தேசியக் கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் கலந்துரையாடாது தன்னிச்சையாக தீர்மானம் எடுத்தமை தொடர்பில் கவலை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இது ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான புரிந்துணர்வை பாதிக்கும் விடயம். இது சம்பந்தமாக விரைவில் இரு கட்சிகளும் இணைந்து நல்லதொரு தீர்மானத்தை எடுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கூறினார்.

இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான  கரு ஜெயசூரிய மற்றும் ஜோன் அமரதுங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்விடயம் சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் விரைவில் கூடி தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி செயலாளர் நாயகம் கல்முனை நியூஸ்  இணையதளத்திற்கு தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்