க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சாதனை படைத்தோருக்கு துறை நீலாவணை மகாவித்தியாலயத்தில் பாரிசளிப்பு விழா
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள
துறைநீலாவணை மகா வித்தியாலயத்தில் கடந்த க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ
சித்திகளைப் பெற்ற மாணவிக்கும் விஷேட சித்திகளைப் பெற்ற ஏனைய
மாணவர்களுக்கும் பரிசளிப்பு வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வுக்கு பாடசாலையின் அதிபர்
எஸ்.விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ்
தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பொன்.செல்வராசாவும், கௌரவ அதிதிகளாக சமாதான நீதவான் தொழிலதிபர் தேசமானி
எம்.இராஜேஸ்வரன், தென்கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட விரிவுரையாளர்
சுஜா ராஜினி வரதராஜன், தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில ஒருவரும்.
காரைதீவு நலன்புரி அமைப்பின் போசகருமான செ. இராசையா ஆகியோர் கலந்து
சிறப்பித்தனர்.
இவர்கள் மாணவர்களுக்கான பரிசில்களையும்
வழங்கி வைத்தனர். இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்
செல்வராசாவுக்கு அவரின் சேவைகளைப் பாராட்டி இப் பாடசாலையின் அதிபர்,
பாடசாலையின் அபிவிருத்திச் சங்க செயலாளர் செ. பேரின்பராசா ஆசியர் ஆகியோர்
பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். இதில் ஏனைய சிறப்பு அதிதிகளும்
பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
Comments
Post a Comment