அம்பாறை மாவட்ட நெல் வயல்களில் புதுவகையான நோய் "விவசாய திணைக்களம் திண்டாட்டம் "
அம்பாறை மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட சிறுபோக நெற்செய்கைக்கு பரவிவரும் புது வகையான நோய் காரணமாக சுமார் 700 ஏக்கர் நெல்வயல்கள் அழிவடையும் நிலையிலுள்ளன.
சிறுபோக நெற்செய்கை பண்ணப்பட்டு அறுவடைக்கு இன்னும் 3 வாரங்களேயுள்ள நிலையில், இவ்வாறான நோய்த் தாக்கத்திற்கு வயல்கள் உள்ளாகியுள்ளன.
மேற்படி நோய் தொடர்பில் ஆராய்வுகளை மேற்கொள்ளவென நோய்த் தாக்கத்திற்குள்ளான நெற்கதிர்களின் மாதிரிகளை கண்ணொருவ விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் உயர் விவசாய அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.
Comments
Post a Comment