கல்முனையில் முன்னோடிப் பரீட்சை
கல்முனை கனடா ரோஸ் ஷரிட்டி நிறுவனத்தின்
உதவியுடன் கல்முனை கல்வி வலயம் ஏற்பாடு செய்த தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இன்று முன்னோடிப் பரீட்சை நடாத்தப் பட்டது. கல்முனை கல்வி வலயத்தில் உள்ள 2879 மாணவர்களுக்கு 18 நிலையங்களில் இப்பரீட்சை நடை பெற்றது.
மாணவர்களுக்கான பரீட்சை பயம்,பரீட்சை ஒன்றுக்கு எவ்வாறு முகம் கொடுத்தல் போன்ற விடயங்களை முன்கூட்டி மாணவர்களுக்கு அறியச் செயயும் வகையில் இப்பரீட்சை நடை பெற்றது. வலய கல்விப் பணிப்பாளர் எம்.டி.தௌபீக் பரீட்சை நிலையங்களுக்குச் சென்று பார்வை இட்டார். இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தால் நடாத்தப் படுவது போன்று நடாத்தப்பட்டது.
Comments
Post a Comment