ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள தேர்தல் தொகுதிகளுக்கு ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்களாக பலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.நெளசாட், அம்பாறை மேற்கு தொகுதி அமைப்பாளராக நாடாளுன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரேசகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, ஸ்ரீலங்கா சுகந்திர கட்சி, அம்பாறை மாவட்ட அமைப்பாளராக சட்டத்தரணி அன்வர் சியாத் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரான நாடாளுன்ற உறுப்பினர் சரத் வீரேசகரவின் ஒருங்கிணைப்பு செயலாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் நியமிக்கப்படவுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் லிபியா சென்றுள்ளதால் இன்றைய நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்