கிழக்கில் ஆசிரியர் ஆளணியைச் சமப்படுத்த நடவடிக்கை!
கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர்
ஆளணியை சமப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம்
மேற்கொண்டுள்ளது. சில பாடசாலைகளில் மேலதிகமான ஆசிரியர்கள்
காணப்படுகின்றனர். சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் குறைவாகக்
காணப்படுகின்றனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இதனை சீர்செய்து சமப்படுத்துவதற்கான
நட வடிக்கையை மேற்கொள்வதற்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம்
இது தொடர்பான விவரங்களை சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களிடமும்
கோரியுள்ளார். ஒரே பாடசாலையில் 8 வருடங்களுக்கு மேல் கடமையாற்றும்
ஆசிரியர்கள் இம் மாதம் இறுதிக்குள் வலயத்திலுள்ள ஆசிரியர் பற்றாக்
குறையாகவுள்ள வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
அத்துடன், வெளிவலயப்
பாடசாலைகளுக்கிடையிலான இடமாற்றம் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு
முன்னர் இடம்பெறும் என மாகாணப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம்
தெரிவித்துள்ளார். ஆசிரிய சேவை நியமனத்தின் போது, குறித்த பாடசாலைகளில்
காலத்தை முடிக்காமல் இடமாற்றம் பெற்றவர்கள் மீண்டும் அதே பாடசாலைகளுக்கு
திருப்பி அனுப்பப்படவுள்ளனர். இதேவேளை, வெளிகல்வி வலயங்களிலும்,
வெளிமாவட்டங்களிலும் கடமையாற்ற விரும்புகின்ற ஆசிரியர்களிடமிருந்தும்
விவரங்கள் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment