Posts

சாய்ந்தமருது வைத்திய சாலைக்கு அன்பளிப்பு

Image
புதிதாக கட்டப்பட்டுள்ள சாய்ந்தமருது மாவட்ட வைத்திய சாலைக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எம்.ஏ.ஜெமீல் தனது  நிதியிலிருந்து புள் வெட்டும் இயந்திரம் ஒன்றை  வழங்கியுள்ளார். இந்த இயந்திரம் வைத்திய சாலை பொறுப்பதிகாரி எம்.ரீ. இப்ராஹீமிடம்  கையளித்தார்.

நீண்ட காலத்தின் பின் கல்முனை பொலிஸ் நிலைய பரிசீலனை

Image
கடந்த  யுத்த காலத்தின் பின்னர் முதல் தடவையாக கல்முனை பொலிஸ் நிலைய பரிசோதனையும் பொலிசாரின் அணிவகுப்பு மரியாதையும் இன்று நடை பெற்றது. இந்த வைபவத்தில் அம்பாறை பொலிஸ் அதியட்ச்சகர் பிரேமலால் ரணகல , கல்முனை உதவி பொலிஸ் அதியட்ச்சகர் என்.எம்.மென்டிஸ் , கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரசுடன் தமிழ் தரப்பு பேச்சு ஹக்கீமை சம்பந்தர் இணைப்பார?

Image
தேசியப்தேசியபிரச்சினைகளுக்கான தீர்வு விடயத்தில் தமிழ் – முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவங்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பின் பின்னர் அரசாங்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, தேசிய பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தின் நம்பகத்தன்மையை பாதுகாக்கும் என்று நம்புவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்  தெரிவித்துள்ளார். ஆட்சியை மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டிருந்த ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்கிரஸ்  இன்று அரசுடன் பேசுவதற்கு சம்பந்தனின் தயவை நாடி நிற்கிறது . புலிகளால் மூதூர் மக்கள் துன்புறுத்தப்பட்ட போதிலும்  புலிகளின் வாலாக இருந்த சம்பந்தன் பாராளுமன்றில்  முஸ்லிம்களிடத்தில் ஆயுத குழுக்கள் இருக்கின்றது .மூதூரில்  உள்ள ஒசாமா குழு கைது  செயப்பட வேண்டுமென  வீண் புரளிகளை கிளப்பினார்  . அதற்கான பரிசே  கல்முனையில்  சம்பந்தனுக்கு ரவுஊப் ஹக்கீமால் அணிவிக்கப்பட்ட கிரீடமாகும். அரசுடன் சம்பந்தன் பேச்சு நடத்த...

நாவிதன்வெளி பிரதேசத்தில் மத்தியஸ்த சபை.

Image
நாவிதன்வெளி பிரதேசத்திற்கான முதலாவது மத்தியஸ்த சபை அண்மையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்முனை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எம்.றிஸ்வி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான நியமனப் பத்திரங்களை வழங்கி வைத்தார். நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் மத்தியஸ்த சபைத் தலைவர் த.பூவேந்திரன் பிரதேச சபைத் தவிசாளர் த.கலையரசன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அதேநேரம் நாவிதன்வெளி பிரதேசத்தில் கடமையாற்றும் சமுர்த்தி அலுவலர்களுக்கு முதல்தடவையாக அலுவலகப் பைபகள் வழங்கப்பட்டது. அவர்களுக்கான பைகளை நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் அவர்கள் வழங்கி வைத்தார்

பொத்துவிலில் போலியான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்த நெக்டோ சோடா கண்டுபிடிப்பு..!

Image
போலியான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட நெக்டோ சோடா அம்பாறை மாவட்டம் பொத்துவில் சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பொத்துவில் பாக்கியவத்தையிலுள்ள பாடசாலை சிற்றுண்டிச்சாலை திடீரென பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பொழுது சிவப்பு நிறத்திலான நெக்டோ சோடா லேபிள் எதுவும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டு பிடிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் சட்டவிரோதமாக போலியான முறையில் இச்சோடா தயாரிக்கப்பட்டு குறைந்தவிலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவது அறியப்பட்டுள்ளது. குறித்த சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கும், விற்பனை முகவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிரேஷ்ட சுகாதாரப் பரிசோதகர் கூறியுள்ளார்.

சம்மாந்துறையில் மினி சூறாவளி

Image
சம்மாந்துறையில் நேற்று இரவு மினி சூறாவளி ஒன்று வீசியது. 6.30 மணியில் இருந்து 7 மணிவரைக்கும் அரை மணித்தியாலங்கள் வரை இம்மினி சூறாவளி நீடித்தது. சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட மஜித்புரம்,செந்நெல் கிராமம்,சம்புமடு ,உடங்கா,நெய்னார்காடு உட்பட கரையோரக் கிரமாங்கள் பலவும் இம்மினி சூறாவளியால் பாதிப்படைந்தன. குறிப்பாக ஆறு வீடுகளும், ஒரு கடையும் பகுதியளவில் சேதம் அடைந்தன. அதே போல் 64 செங்கல் வாடிகளும் இப்பகுதிகளில் முழுமையாக உடைந்து விட்டன. அதே நேரம் செந்நெல் கிராமம்,,சம்புமடு ஆகியவற்றில் மின்சாரக் கம்பங்கள் நிலத்தில் விழுந்தன. மின் கம்பிகள் அறுந்தன. அதே போல தொலைபேசிக் கம்பிகளும் அறுந்தன.இதனால் அங்கு மின்சாரத் தடை ஏற்பட்டதுடன் தொலைபேசிகளும் செயலிழந்து போயின.

கல்முனையில் அதிகமான முஸ்லிம்கள் மது அருந்துகிறார்கள்

Image
பொலிஸ் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா   கல்முனையில்  இடம்பெறும் கொள்ளை மற்றும் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு கல்முனை, சாய்ந்தமருது பிரதேச  சிவில் பாது காப்பு குழுக்களுக்கான கருத்தரங்கு சனிக்கிழமை கல்முனை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா தலைமையில் நடை பெற்றது. மர்ஹூம் அஸ்ரப்  உயிருடன் இருக்கும் காலம் வரை  கல்முனை பிர தேசத்தில் மதுபான சாலைக்கான அனுமதி வழங்கப்படவில்லை .ஆனால் இன்று கல்முனை பிர தேசத்தில் மதுபான சாலைகள் அதிகரித்துள்ளன. இங்குள்ள  அநேக முஸ்லிம்கள் மது அருந்துகிறார்கள். கல்முனையில்  இடம்பெறுகின்ற குற்ற செயல்களுக்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது என கல்முனை போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா தெரிவித்தார்.

கல்முனை கிட்டங்கி பால வேலைகள் ஆமை வேகத்தில்

Image
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டுவந்த கல்முனை கிட்டங்கி பால வேலைகள்  சனியன்று  சற்று  துரிதமாக  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 1 கோடி 90 லட்ச ருபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள அப் பாலத்திற்கான   வேலைகள்  90 நாள் திட்டமாகும் .எனினும்  தற்போது  அதிகாரிகள் சற்று உசார் அடைந்துள்ளது போல் தெரிகிறது.

கல்முனை அசீஸ் டாக்டர் வீட்டில் பகல் கொள்ளை

Image
கல்முனை அணைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும், கல்முனை குடி ஜும்மா பள்ளிவாசல் தலைவருமான  டாக்டர்.எஸ்.எம்.எ.அசீஸ் வீடில் இன்று சனிக்கிழமை        பகல் 10 மணிக்கும்  12.00 மணிக்கும் இடயில் கொள்ளை சம்பவம் இடம் பெற்றுள்ளது. வீட்டில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகை கொள்ளை இடப்பட்டுள்ளதாக கல்முனை பொலிசில் முறைப்பாடு செயப்பட்டுள்ளது.

சட்ட விரோத மின் பாவனையாளர்கள் 82 பேர் கைது

Image
நீலாவணை,துறைநீலாவணை  பிரதேசத்தில் சட்ட விரோதமாக மின்சாரம் பாவித்த 82       பேர் இலங்கை மின்சார சபை புலனாய்வு குழு மற்றும் பொலிசாரினால் கைது செயப்பட்டுள்ளனர். இந்த கைது சனிக்கிழமை அதி காலை  3.00     மணிக்கு இடம் பெற்றது.  கைது செயப்பட்டவர்கள் கல்முனை பொலிசில்  தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப் படுகின்றனர்.

பாண்டிருப்பு பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்ப்பு

Image
  பாண்டிருப்பு பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வெள்ளிக்கிழமை மதியம் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டன . இரகசிய தகவல் ஒன்றை அடுத்து அம்பாறைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் காலை முதல் இப்பிரதேசத்தில் சுற்றிவளைப்புத் தேடுதல் ஒன்றை நடத்தினர் .   அவர்கள் குறித்த வீட்டு வளவில் உரப்பைகளுக்குள் வைத்து பீப்பாய் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை கண்டு பிடித்தனர் . அத்துடன் இந்த ஆயுதங்களை உடைமையில் வைத்திருந்தார் என்கிற சந்தேகத்தில் வீட்டு உரிமையாளரான பொன்னையா தேவ சாந்தி ( வயது 40) என்று அழைக்கப்படுகிற பெண்ணையும் கைது செய்து கல்முனைப் பொலிஸ் நிலையப் பொலிஸாரிடம் கையளித்தனர் . அவர் தற்போது கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். . மேலதிக புலனாய்வு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்று கல்முனைப் பொலிஸ்   நிலைய அதிகாரி ஒருவர்  தெரிவித்தார் .

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக சரத் வீர சேகர எம்.பி நியமனம்

Image
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக சரத் வீர சேகர எம்.பி   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமனம் செயப்பட்டுள்ளார். சரத் வீர சேகர எம்.பி கடந்த பொதுத் தேர்தலில்  அதி கூடிய விருப்பு வாக்குப் பெற்றவர்.

கல்முனை நீதிமன்றில் 12 வயது சிறுமி பெற்றோருக்கு எதிராக வழக்கு

Image
பெற்றோருடன் சேர்ந்து வாழ முடியாது என்று தெரிவித்து 12 வயதுடைய முஸ்லிம் சிறுமி ஒருவர் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வாக்குமூலம் வழங்கினார். பெற்றோர் அடித்துச் சித்திரவதை செய்கின்றனர் என்றும், பாடசாலைக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்திருந்து எந்த நேரமும் வேலை வாங்குகின்றனர் என்றும் அவர் அவ்வாக்குமூலத்தில் தெரிவித்தார் .     அந்த நேரம் சிறுமியின் பெற்றோரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர் . இவ்வழக்கு கல்முனை நீதவான் முஹமட் ரிஸ்வி முன்னிலையில் இடம்பெற்றது .   சிறுமியை ஆதரித்து நோர்வே அகதிகள் கவுன்சிலின் சட்ட ஆலோசகர்களான சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பர் . சட்டத்தரணி பிறேம் நஸீர் ஆகியோர் ஆஜராகி வாதாடினர் .   பெற்றோரின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஏ . எம் . பதுறுதீன்இ எப் . எம் . ஏ . அன்ஸார் மௌலானா ஆகியோர் ஆஜராகி வாதாடினர் .   சிரேஷ்ட சட்டத்தரணி அன்ஸார் மௌலானா அவருடைய வாதத்தில் சிறுமியின் உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படத்தான் வேண்டும் . ஆனால் குடும்ப அலகையும் பாதுகாக்க வேண்டியது ...

கல்முனையில் நான்கு கடைகள் ஒரே இரவில் கொள்ளை

Image
அண்மைய காலமாக  கல்முனை பிரதேசத்தில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. கடந்த புதன் கிழமை நள்ளிரவு கல்முனை பிரதான  வீதியில்  உள்ள நான்கு கடைகள் உடைக்கப்பட்டு சூரயாடப்பட்டுள்ளன. கல்முனையில்  இடம்பெறும் கொள்ளை சம்பவன்களால் கல்முனை வர்த்தகர்கள் அச்சம்  அடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிசார் தீவிர விசாரணை  மேற்  கொண்டு வருகின்றனர்.

கல்முனையில் சட்டவிரோத உர மூடை 340 பொலிசாரால் பறிமுதல்

Image
சட்டவிரோதமாக கள்ளத்தனமாக கல்முனைக்கு கடத்திவரப்பட்ட 340 உர மூடைகள் கைப்பற்றப் பட்டுள்ளன. மஹிந்த சிந்தனையில் விவசாயிகளுக்கு மானியமாக வழங்ககப்படும் உரமூடைகள் வேறு பைகளில் பொதி செயப்பாட்டு லொறியில் கொண்டு வரப்பட்ட போது  காரைதீவு  விசேட அதிரடி படையினரால் புதன் கிழமை கண்டு  பிடிக்கப்பட்டு கல்முனை பொலிசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடத்திவரப்பட்ட  சட்ட விரோத உர மூடைகள் கல்முனை , சாய்ந்தமருது பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிள்ளதாக  கல்முனை போலீசார் தெரிவிக்கின்றனர்.

கல்வியில் கிழக்குமாகாணம் 9வது இடத்தில்

Image
பொதுப்பரீட்சைகளின்பெறுபேறுகளின்   அடிப்படையில் கல்வியில் கிழக்குமாகாணம் 9வது இடத்தில் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளார் மாகாணகல்விப்பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம்.கடந்த வருடம் கல்விக்கென அரசு 660 கோடி செலவழித்துள்ளபோதும் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் இதற்கான காரணங்களைக்கண்டறிந்து மாகாணத்தின் கல்விநிலையை மேம்படுத்த கல்வியதிகாரிகள் முன்வரவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் நடைபெற்ற மாகாணகல்வியதிகாரிகளின் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.   அத்துடன்வருடாந்தம் 20ஆயிரம் மாணவர்கள் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றுகின்றபோதிலும்,8ஆயிரம் பேரே சித்தியடைகின்றனர் 12ஆயிரம் பேர் நிர்க்கதியடைகின்றனர் இது சமூகத்துக்கு பெரும் பிரச்சினையாக மாறுகின்றது.கடந்த வருடத்தில் மாத்திரம் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் 4500மாணவர்கள் இடைவிலகி...

கிழக்கு மாகண குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்.

Image
கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு கிழக்கு மாகாண முதலமைச்சரினால் அமைச்சர் வாரியத்திற்கு கொண்டுவரப்பட்ட பிரேரணையின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஆராய்வுக் கூட்டம் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் தலைமையில் இடம்பெற்றது . முதலாவது ஆராய்வுக் கூட்டம் அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் 31.05.2010 அன்றும் 2வது ஆராய்வுக் கூட்டம் மட்டக்களப்பு கச்சேரியிலும், மூன்றாவது கூட்டம் மட்டக்களப்பிலும் இடம்பெற்றது. விசேடமாக கிழக்கு மாகாணத்தில் வரட்சி காலங்களில் ஏற்படுகின்ற குடிநீர் பிரச்சினைக்கு உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக அவர்களுக்கான குடிநீரை வழங்குவது தொடர்பாகவும் பேசப்பட்டது

திருட்டு மின்சாரம் கிழக்கிலேயே அதிகம்

Image
கிழக்கு மாகாணத்திலேயே திருட்டுத் தனமாக மின்சாரம் பெறும் நடவடிக்கை இடம்பெறுவதாக அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நேற்று முதல் மீண்டும் நாடளாவிய ரீதியில் திருட்டு மின்சாரம் பெறுபவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க கூறினார். மின்சக்தி எரிசக்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:- கிழக்கு மாகாணத்தில் 29 வீதமான திருட்டு மின்சாரம் பெறப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் 15 வீதமே இடம்பெறுகின்றது. கடந்த காலங்களில் சட்டவிரோதமாக மின்சாரம் பெறுபவர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. தற்பொழுது மின்சார சபை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 20 வருடங்களின் பின்னர் யாழ்பாண பெரிய பள்ளிவாசல் திறக்கப்படுகிறது..!

Image
கடந்த 20 வருடங்களின் பின்னர் யாழ்பாண பெரிய பள்ளிவாசல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளாதாக அப்பள்ளி வாசல் நிர்வாக சபை முக்கியஸ்தர் சட்டத்தரணி ரமீஸ் தெரிவித்துள்ளார். 1996ம் ஆண்டு யாழ் குடாநாடு படையினரால் கைப்பற்றப்பட்ட பிற்பாடு யாழ் நகரில் முஸ்லிம்கள் வசிக்காத காரணத்தால் கைவிடப்பட்ட நிலையிலேயே இப்பள்ளிவாசல் காணப்பட்டது. எனினும் தற்போது யாழ் நகரில் முஸ்லிம்கள் மீண்டும் குடியேறியுள்ள காரணத்தால் மீள் புனர்நிர்மானத்துடன் இப்பள்ளிவாசல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்பள்ளிவாசல் திறப்புவிழாவை முன்னிட்டு எதிர்வரும் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில் வைத்தியமுகாம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரமீஸ் தெரிவித்துள்ளார். யாழ்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியில் அமைந்துள்ள இப்பள்ளிவாசல், 1713ம் ஆண்டு ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்டது. இதுவே யாழ்ப்பாணத்தின் முதல் பள்ளிவாசலும் ஆகும். எதிர்வரும் வெள்ளிக்கிழமை இப்பள்ளிவாசலில் இடம்பெறவுள்ள குத்பா பேருரை அஷ்ஷெய்க் எம்.ஜே.அப்துல் ஹாலிக் அவர்களால் நிகழ்த்தப்படும் என்பதும் ...

முறைப்பாடுகளை அமைச்சுக்கு நேரடியாகவும் தெரிவிக்கலாம்

Image
மின் பாவனை மேம்பாட்டுக்கு தொலைபேசி இலக்கங்கள்! நாட்டின் மின்சார  விநியோகத்தை சீராக மேற்கொள்வதற்கும் பாவனையாளர்களின்  வசதி கருதியும்  மூன்று தொலைபேசி இலக்கங்களை மின்சக்தி எரிசக்தி  அமைச்சு அறிமுகப்படுத்தி உள்ளது  அதன்படி மின் பாவனையாளர்களின் முறைப்பாடுகளை துரிதமாக முன் வைக்கவும்  அதற்கு உடனடி தீர்வு  வழங்குவதற்கும்  மின்சக்தி எரிசக்தி அமைச்சு மூன்று அவசர தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதற்கமைய மின்சாரம் தடைப் பட்டால்  மற்றும் முறைப்பாடுகளை மின்சார சபையின் 1987 என்ற இலக்கத்துடனோ இலங்கை மின் கம்பனியின் 1910 என்ற இலக்கத்துடனோ தொடர்பு கொண்டு முறையிடலாம். இதுதவிர மின்சார சபை அல்லது மின்சக்தி எரிசக்தி அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களில் காணப்படும் குறைபாடுகள் மோசடிகள் மற்றும் முறைப்பாடுகளை மின்சக்தி எரிசக்தி அமைச்சின் அவசர அழைப்பு இலக்கமான 1901 இற்கு தொடர்பு கொண்டு நேரடியாகவும்  தெரிவிக்க முடியும்.

சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினம்

Image
புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வும், கொடி விற்பனையும் ,உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் விழாவும் கல்முனை பிரதேச செயலகத்தில் திங்கட் கிழமை நடை பெற்றது. சமுர்த்தி சமுக அபிவிருத்தி மன்றத்தின் அனுசரணையுடன் சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நௌசாத்  தலைமையில்  இடம் பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், முகாமைத்துவ பணிப்பாளர் எ.ஆர்.சாலி ,ஹட்டன் நெசனல் வங்கி முகாமையாளர் எம்.ஏ.எம்.ரபீக்,அபான்ஸ் நிறுவன பணிப்பாளர் எம்.எம்.சர்ஜூன் உட்பட பிர தேச செயலக அதிகாரிகளும்,சமுர்த்தி அதிகாரிகளும் ,சமுர்த்தி சங்க அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு

Image
காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு நேற்று திங்கள்கிழமை கல்யாணக்கால் வெட்டு வைபவம் நடைபெற்றபோது கல்யாணக்காலை சீர்செய்து சந்தனம் பூசி பட்டாடை அணிவித்து பூசை செசய்வதையும் காணலாம் ..

மசூர் மௌலானா தலைமையில் கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வு

Image
மசூர் மௌலானா தலைமையில் கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வு  செவ்வாய் கிழமை நடை பெற்றது. மாநகர முதல்வராக  மசூர் மவுலானா நியமிக்கப் பட்டதை அடுத்து  கொழும்பிலிருந்து மருதமுனைக்கு வந்த அவருக்கு  மருதமுனை மக்களால் பாராட்டு வழங்கப்பட்டது. நேற்று மசூர் மவுலானா தலைமையில் நடை பெற்ற மாதாந்த அமர்வின் போது சக உறுப்பினர்களால் பாராட்டு தெரிவிக்கப் பட்டது. நடை பெற்ற அமர்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான மருதமுனை சட்டத்தரணி ரகீப் ,அமீர் ஆகியோர்  பிரசன்னமாகி இருக்கவில்லை.

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஒன்லைன் திட்டத்தின்கீழ் சாரதி அனுமதிப்பத்திரம்-

Image
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஒன்லைன் திட்டத்தின்கீழ் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் திட்டம் அடுத்த மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் முதற்கட்டமாக கம்பஹாவிலும் குருணாகலிலும் இரண்டு அலுவலகங்களை அடுத்தவாரம் திறக்கின்றது. இந்த இரண்டு மாவட்டச் செயலகங்களிலும் இரண்டு தனியான கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. தற்போது ஏனைய வளங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஒன்லைன் முறைமையின்கீழ் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்கு விண்ணப்பங்கள் நிரப்பி வழங்கவேண்டிய தேவையில்லை. வருகைதரும் கிரமத்தின் அடிப் படையில் இலக்கங்கள் வழங்கப்பட்டு அதற்கேற்ப பின்னர் நேரில் அழைக்கப்படுவர். அப்போது தமது அடையாளஅட்டை, பிறப்புச் சான்றிதழ், மருத்துவச் சான்றிதழ் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன்போது கைவிரல் அடையாளம் பெறப்படுவதுடன் திணைக்களத்தின் விசேட கமராமூலம் புகைப்படம் எடுத்துக்கொள்ளப்பட்டு டிஜிட்டல் முறையில் கையொப்பமும் பெறப்படும். அதன்பின்னர் கட்டணம் செலுத்துவதோடு தமது விபரங்களைச் சரிபார்த்துக் கொடுக்க வே...

உள்ளுராட்சிசபைகளின் சேவைகளை மேம்படுத்த உலக வங்கியின் உதவியுடன் நெல்சிப் .

Image
வடக்கு கிழக்கு மாகாண உள்ளுராட்சி சபைகளின் சேவைகளை மேம்படுத்த உலக வங்கியினுதவியுடன் நெல்சிப் என்ற ஒரு புதிய ஜந்தாண்டு திட்டமொன்று வட-கிழக்கில் அமுல்படுத்தப்படவுள்ளது. அதன் முதற்கட்டமாக சில பிரதேச சபைகளில் மக்களது கருத்துக் கணிப்பு ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் காரைதீவு பிரதேசசபையில் சனியன்று நடைபெற்ற அமர்வில் நெல்சிப் திட்ட நிபுணர்களான கலாநிதி. ஏம்.றசாக் மற்றும் கலாநிதி.எஸ்.அமீர்தீன் ஆகியோர் பிரதிநிதிகளோடு கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.