மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஒன்லைன் திட்டத்தின்கீழ் சாரதி அனுமதிப்பத்திரம்-



மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஒன்லைன் திட்டத்தின்கீழ் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் திட்டம் அடுத்த மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் முதற்கட்டமாக கம்பஹாவிலும் குருணாகலிலும் இரண்டு அலுவலகங்களை அடுத்தவாரம் திறக்கின்றது. இந்த இரண்டு மாவட்டச் செயலகங்களிலும் இரண்டு தனியான கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. தற்போது ஏனைய வளங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஒன்லைன் முறைமையின்கீழ் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்கு விண்ணப்பங்கள் நிரப்பி வழங்கவேண்டிய தேவையில்லை. வருகைதரும் கிரமத்தின் அடிப் படையில் இலக்கங்கள் வழங்கப்பட்டு அதற்கேற்ப பின்னர் நேரில் அழைக்கப்படுவர். அப்போது தமது அடையாளஅட்டை, பிறப்புச் சான்றிதழ், மருத்துவச் சான்றிதழ் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன்போது கைவிரல் அடையாளம் பெறப்படுவதுடன் திணைக்களத்தின் விசேட கமராமூலம் புகைப்படம் எடுத்துக்கொள்ளப்பட்டு டிஜிட்டல் முறையில் கையொப்பமும் பெறப்படும். அதன்பின்னர் கட்டணம் செலுத்துவதோடு தமது விபரங்களைச் சரிபார்த்துக் கொடுக்க வேண்டும். பின்னர் வீதி சமிக்ஞைகள் தொடர்பான பரீட்சை குறித்த ஒரு திகதியில் நடத்தப்படும். இதில் தேறியதும் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி