பாண்டிருப்பு பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்ப்பு
பாண்டிருப்பு பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வெள்ளிக்கிழமை மதியம் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டன. இரகசிய தகவல் ஒன்றை அடுத்து அம்பாறைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் காலை முதல் இப்பிரதேசத்தில் சுற்றிவளைப்புத் தேடுதல் ஒன்றை நடத்தினர்.
அவர்கள் குறித்த வீட்டு வளவில் உரப்பைகளுக்குள் வைத்து பீப்பாய் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை கண்டு பிடித்தனர். அத்துடன் இந்த ஆயுதங்களை உடைமையில் வைத்திருந்தார் என்கிற சந்தேகத்தில் வீட்டு உரிமையாளரான பொன்னையா தேவ சாந்தி (வயது 40) என்று அழைக்கப்படுகிற பெண்ணையும் கைது செய்து கல்முனைப் பொலிஸ் நிலையப் பொலிஸாரிடம் கையளித்தனர்.
அவர் தற்போது கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.. மேலதிக புலனாய்வு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்று கல்முனைப் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Comments
Post a Comment