முறைப்பாடுகளை அமைச்சுக்கு நேரடியாகவும் தெரிவிக்கலாம்



மின் பாவனை மேம்பாட்டுக்கு தொலைபேசி இலக்கங்கள்!
Print E-mail
Image
நாட்டின் மின்சார  விநியோகத்தை சீராக மேற்கொள்வதற்கும் பாவனையாளர்களின்  வசதி கருதியும்  மூன்று தொலைபேசி இலக்கங்களை மின்சக்தி எரிசக்தி  அமைச்சு அறிமுகப்படுத்தி உள்ளது 
அதன்படி மின் பாவனையாளர்களின் முறைப்பாடுகளை துரிதமாக முன் வைக்கவும்  அதற்கு உடனடி தீர்வு  வழங்குவதற்கும்  மின்சக்தி எரிசக்தி அமைச்சு மூன்று அவசர தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதற்கமைய மின்சாரம் தடைப் பட்டால்  மற்றும் முறைப்பாடுகளை மின்சார சபையின் 1987 என்ற இலக்கத்துடனோ இலங்கை மின் கம்பனியின் 1910 என்ற இலக்கத்துடனோ தொடர்பு கொண்டு முறையிடலாம்.

இதுதவிர மின்சார சபை அல்லது மின்சக்தி எரிசக்தி அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களில் காணப்படும் குறைபாடுகள் மோசடிகள் மற்றும் முறைப்பாடுகளை மின்சக்தி எரிசக்தி அமைச்சின் அவசர அழைப்பு இலக்கமான 1901 இற்கு தொடர்பு கொண்டு நேரடியாகவும்  தெரிவிக்க முடியும்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்