கடந்த 20 வருடங்களின் பின்னர் யாழ்பாண பெரிய பள்ளிவாசல் திறக்கப்படுகிறது..!


கடந்த 20 வருடங்களின் பின்னர் யாழ்பாண பெரிய பள்ளிவாசல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளாதாக அப்பள்ளி வாசல் நிர்வாக சபை முக்கியஸ்தர் சட்டத்தரணி ரமீஸ் தெரிவித்துள்ளார். 1996ம் ஆண்டு யாழ் குடாநாடு படையினரால் கைப்பற்றப்பட்ட பிற்பாடு யாழ் நகரில் முஸ்லிம்கள் வசிக்காத காரணத்தால் கைவிடப்பட்ட நிலையிலேயே இப்பள்ளிவாசல் காணப்பட்டது. எனினும் தற்போது யாழ் நகரில் முஸ்லிம்கள் மீண்டும் குடியேறியுள்ள காரணத்தால் மீள் புனர்நிர்மானத்துடன் இப்பள்ளிவாசல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்பள்ளிவாசல் திறப்புவிழாவை முன்னிட்டு எதிர்வரும் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில் வைத்தியமுகாம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரமீஸ் தெரிவித்துள்ளார். யாழ்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியில் அமைந்துள்ள இப்பள்ளிவாசல், 1713ம் ஆண்டு ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்டது. இதுவே யாழ்ப்பாணத்தின் முதல் பள்ளிவாசலும் ஆகும். எதிர்வரும் வெள்ளிக்கிழமை இப்பள்ளிவாசலில் இடம்பெறவுள்ள குத்பா பேருரை அஷ்ஷெய்க் எம்.ஜே.அப்துல் ஹாலிக் அவர்களால் நிகழ்த்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்