உள்ளுராட்சிசபைகளின் சேவைகளை மேம்படுத்த உலக வங்கியின் உதவியுடன் நெல்சிப் .
வடக்கு
கிழக்கு மாகாண உள்ளுராட்சி சபைகளின் சேவைகளை மேம்படுத்த உலக
வங்கியினுதவியுடன் நெல்சிப் என்ற ஒரு புதிய ஜந்தாண்டு திட்டமொன்று
வட-கிழக்கில் அமுல்படுத்தப்படவுள்ளது. அதன் முதற்கட்டமாக சில பிரதேச
சபைகளில் மக்களது கருத்துக் கணிப்பு ஆய்வொன்று
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் காரைதீவு பிரதேசசபையில் சனியன்று
நடைபெற்ற அமர்வில் நெல்சிப் திட்ட நிபுணர்களான கலாநிதி. ஏம்.றசாக் மற்றும்
கலாநிதி.எஸ்.அமீர்தீன் ஆகியோர் பிரதிநிதிகளோடு கலந்துரையாடல்களில்
ஈடுபட்டனர்.
Comments
Post a Comment