சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினம்
புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வும், கொடி விற்பனையும் ,உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் விழாவும் கல்முனை பிரதேச செயலகத்தில் திங்கட் கிழமை நடை பெற்றது. சமுர்த்தி சமுக அபிவிருத்தி மன்றத்தின் அனுசரணையுடன் சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நௌசாத் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், முகாமைத்துவ பணிப்பாளர் எ.ஆர்.சாலி ,ஹட்டன் நெசனல் வங்கி முகாமையாளர் எம்.ஏ.எம்.ரபீக்,அபான்ஸ் நிறுவன பணிப்பாளர் எம்.எம்.சர்ஜூன் உட்பட பிர தேச செயலக அதிகாரிகளும்,சமுர்த்தி அதிகாரிகளும் ,சமுர்த்தி சங்க அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment