சம்மாந்துறையில் மினி சூறாவளி


சம்மாந்துறையில் நேற்று இரவு மினி சூறாவளி ஒன்று வீசியது. 6.30 மணியில் இருந்து 7 மணிவரைக்கும் அரை மணித்தியாலங்கள் வரை இம்மினி சூறாவளி நீடித்தது.


சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட மஜித்புரம்,செந்நெல் கிராமம்,சம்புமடு ,உடங்கா,நெய்னார்காடு உட்பட கரையோரக் கிரமாங்கள் பலவும் இம்மினி சூறாவளியால் பாதிப்படைந்தன. குறிப்பாக ஆறு வீடுகளும், ஒரு கடையும் பகுதியளவில் சேதம் அடைந்தன.

அதே போல் 64 செங்கல் வாடிகளும் இப்பகுதிகளில் முழுமையாக உடைந்து விட்டன. அதே நேரம் செந்நெல் கிராமம்,,சம்புமடு ஆகியவற்றில் மின்சாரக் கம்பங்கள் நிலத்தில் விழுந்தன. மின் கம்பிகள் அறுந்தன. அதே போல தொலைபேசிக் கம்பிகளும் அறுந்தன.இதனால் அங்கு மின்சாரத் தடை ஏற்பட்டதுடன் தொலைபேசிகளும் செயலிழந்து போயின.

Click to open image!

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்