பொத்துவிலில் போலியான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்த நெக்டோ சோடா கண்டுபிடிப்பு..!



போலியான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட நெக்டோ சோடா அம்பாறை மாவட்டம் பொத்துவில் சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பொத்துவில்

பாக்கியவத்தையிலுள்ள பாடசாலை சிற்றுண்டிச்சாலை திடீரென பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பொழுது சிவப்பு நிறத்திலான நெக்டோ சோடா லேபிள் எதுவும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டு பிடிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் சட்டவிரோதமாக போலியான முறையில் இச்சோடா தயாரிக்கப்பட்டு குறைந்தவிலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவது அறியப்பட்டுள்ளது. குறித்த சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கும், விற்பனை முகவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிரேஷ்ட சுகாதாரப் பரிசோதகர் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்