Posts

Showing posts from October, 2010

எம்.எச்.எம்.அஷ்ரபின் 10ஆவது நினைவு தினத்தில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் 10ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் நம்பவர் 20ஆம் திகதி கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் இடம்பெறவுள்ள வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். மர்{ஹம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 10ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால்  நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, விவாதம் குழு நாடகப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கும் பரிசில்களும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபத் தலைவர் மர்{ஹம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 10ஆவது நினைவு தினம் கடந்த செப்டம்பர் 16ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது

கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையிலிருந்து வைத்தியர்கள் வெளியேறியுள்ளனர்.

Image
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இருந்து நான்கு பெரும்பான்மையின வைத்தியர்கள் உட்பட ஐந்து வைத்தியர்கள் சுகயீனு விடுமுறை எடுத்து வெளியேறிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இன்னும் பலர் வெளியேநவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய நிபுணர் ஒருவரின் மனைவி, தமக்கு விடுத்த அச்சுறுத்தலின் பேரிலேயே தாம் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிச் செல்வதாக குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளளார். வெளியேறிச் செல்லும் நான்கு வைத்தியர்களும் நாளை சுகாதார அமைச்சர், அமைச்சின் செயலாளர், அமைச்சின் இணைப்பாளர் ஆகியோரை சந்தித்து, இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கவுள்ளது. கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களான கிரிசாந்த, துல்மினி, நிமிர, மற்றும் அசோக்குமார் ஆகிய வைத்தியர்களே வைத்தியசாலையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 25ஆம்திகதி புதிய வைத்திய அத்தியட்சகர் நியமனம் செய்ய்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிரேஷ்ட பிரஜைகள் உற்பத்தி கண்காட்சி

Image
மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பிரஜைகளின் உற்பத்தி  விற்பனை கண்காட்சி சனிக்கிழமை காலை கல்முனை மெதடிஸ்த  மண்டபத்தில் நடை பெற்றது.நிகழ்வில் பிரதம அதிதியாக ஹெல்ப் ஏஜ் நிறுவன் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.பைலனாதன் கலந்து கண்காட்சிஏய் ஆரம்பித்து வைத்தார்

கிழக்கிலங்கை கிறிஸ்தவ வாழ்வு சமூகங்களின் வருடாந்த மகாநாடு

Image
      கிழக்கிலங்கை கிறிஸ்தவ வாழ்வு சமூகங்களின் வருடாந்த மகாநாடு கல்முனை திரு இருதய ஆண்டவர் மண்டபத்தில் மூன்று தினங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமலை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதிமேதகு ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களும், பிரதம அதி...

பெரியநீலாவனையில் கஞ்சா மீட்பு

Image
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவனை பகுதியில் இருந்து களுவாஞ்சிகுடி பொலிஸாரால் இன்றுகாலை ஒரு தொகை கஞ்சா போதைப்பொருள் மீட்க்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் எடிசன் குணதிலக, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சர் ஐ.எம்.கருணாரட்ன ஆகியோரின் பணிப்புரைக்கமைய கல்முனை பகுதிகளில் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தலைமையிலான குழுவினர் இந்த கஞ்சா போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். இதனடிப்படையில் இன்று காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கல்முனை பொலிஸ் பிரிவுக்கும் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கும் எல்லைப்பகுதியாகவுள்ள பெரியநீலாவனைப்பகுதியில் உள்ள பெண்ணொருவரின் வீட்டில் இருந்து இந்த கஞ்சா மீட்க்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தெரிவித்தார். சிவிலுடையில் கஞ்சா வாங்குவது போல் சென்ற பொலிஸார் குறித்த விற்பனைசெய்த இடத்தை கையுமெய்யுமாக பிடித்ததாகவும் அவர் தெரிவித்தார். இதன்போது கஞ்சா பொட்டலங்கங்கள் உட்பட பொட்டலம் செய்யப்படவிருந்த கஞ்சாவை மீட்டதுடன் பெண்ண...

அம்பாறையில் வரி செலுத்துதல் தொடர்பில் வர்த்தகர்களுக்கு விளக்கம் _

Image
    அம்பாறை மாவட்ட வரி மதிப்பீட்டு பிராந்திய அலுவலகத்தின் வரி செலுத்துதல் தொடர்பான செயலமர்வு சாய்ந்தமருது பெரடஸ் விடுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. செயலமர்வுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். விசேடமாக கிழக்கு மாகாண சபை மேற்கொண்டு வருகின்ற வரி அறவீடு அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிக் க...

500 அபின் பக்கற்றுகளுடன் மூன்று வர்த்தகர்கள் பொலிஸாரால் கைது

Image
      கல்முனையில் கஞ்சா கலந்த 5500 மதன கோகன அபின் லேகிய பக்கற்றுகளை விற்பனை செய்த 3 வர்த்தகர்களை இன்று மாலை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை பொதுச் சந்தைக்குள் இரு வர்த்தக நிலையங்களைச் சுற்றிவளைத்த போதே இவ் வர்த்தக நிலையங்களிலிருந்து இப் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக களுவாஞ்சக்குடி பொலிஸ் நிலைய பொறுப்...

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக டாக்டர் ஏ.எல்.எம்நஸீர் நியமிக்கப்பட்டுள்ளார்

Image
 மட்டக்களப்பு பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி வரும் டாக்டர் ரஹ்மான நியமிக்கப்பட்டுள்ளார். கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக டாக்டர் ஏ.எல்.எம்நஸீர் நியமிக்கப்பட்டுள்ளார். பதுளை பிராந்திய வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர் நியமனம்.

Image
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் சுகாதார வைத்தி யஅதிகாரியாகக் கடமையாற்றி வரும் எம்.எஸ்.எம்.ஜாபீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. சுகாரா அமைச்சின் செயலாளர் ரவீந்திர ருபேருவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு முதல் தடவையாக 12 வைத்தியர்கள் நியமனம்.

Image
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு முதல்தடவையாக ஒரேதடவையில் 12 டாக்டர்கள் நிமிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் உதவி வைத்தய அத்தியட்சகர் டாக்டர கிரிசுதன் தெரிவித்தார். இவ் வைத்தியசாலைக்கு ஒரே தடவையில் நியமிக்கப்பட்ட அதிகூடிய டாக்கடர்கள் 8பேரே இதற்கு முன்னர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் பின்பு 3, 4 என்றே நியமிக்கப்பட்டதுண்டு. இதைப்பல தடவைகள் சுகாதார அமைச்சியல் நடைபெற்ற கூட்டங்களிலும் சுட்டிக்காட்டியிருந்த வைத்தியசாலை அத்தியட்சகர் சா.இராஜேந்திரனின் முயற்சி காரணமாகவே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கல்முனையில் சட்டவிரோதஒளிபரப்பு நிலையம்முற்றுகை

Image
கல்முனையில் சட்ட விரோதமாக இயங்கி வந்த ஒளிபரப்பு நிலையம் இன்று கல்முனை பொலிசாரால் முற்றுகை இடப்பட்டது. நிலைய உரிமையாளர் கைது செயப்பட்டதுடன் இலத்திரனியல் உபகரணங்களும் கல்முனை பொலிசாரினால் கைப்பற்றப் பட்டுள்ளன 

ரவுப் ஹக்கீமின் மற்றுமொரு திரு விளையாடல்

Image
தொடர்பாடல் பரிமாற்ற தாமதம் காரணமாகவே  உள்ளூராட்சி  சீர்  திருத்தத்தை எதிர்த்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் வாக்களித்து விட்டார் என  ரவுப் ஹக்கீம் தெரிவித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத கருத்தாகும். உள்ளூராட்சி  சீர்  திருத்தத்தை எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் கடந்த 17.10.2010 ஆம் திகதி வீர கேசரி பத்திரிகைள் தெளிவாக அறிக்கை விட்டிருந்தார். அந்த அறிக்கை இணைக்கப் பட்டுள்ளது .

சாய்ந்தமருது கடற்கரையில் குண்டுகள் மீட்பு

Image
கல்முனை சாய்ந்தமருது கடற்கரையில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து கல்முனை பொலிஸார் குறித்த இடத்திற்குச் சென்று சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது கடற்கரை பகுதியில் இருந்து 5 மோட்டார் ஷெல்கள் மற்றும் ஒரு சாதாரண குண்டு என்பவற்றைப் பொலிஸார் மீட்டுள்ளனர். இந்தக் குண்டுகள் உடனடியாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப்பொருள் தகவல் வழங்க 8 தொலைபேசி இலக்கங்கள்!

Image
4 தொலை நகல் (பக்ஸ்) இலக்கங்கள் போதைப்பொருள் இரகசியத் தகவல்களை வழங்க 8 தொலைபேசி மற்றும் 4 தொலை நகல் (பக்ஸ்) இலக்கங்களை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியூள்ளது. போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸ் விசேட போதைப் பொருள் பிரிவூக்கு தகவல்களை வழங்கும் பொருட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுளளது. போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களை முற்றாக ஒழிக்கும் பொருட்டு பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவூ ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் பாவனை குற்றச் செயல்கள் மற்றும் விற்பனை தொடர்பிலான இரகசியத் தகவல்களை பின்வரும் தொலைபேசி அல்லது தொலை நகல் இலக்கங்களுக்கு நேரடியாக அறிவிக்கலாம். தொலைபேசி இலக்கங்கள். 011- 3182910 011- 3188745 011- 3081010 011- 3182903 011- 3081005 011- 3133655 011- 3081039 011- 3081033 தொலை நகல் (பக்ஸ்) இலக்கங்கள் 011- 2472757 011- 2325391 011- 2542520 011- 2440435

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் 15 கலைஞர்களுக்கு முதலமைச்சர் விருது!

Image
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா-2010 எதிர்வரும் 23, 24 ஆம் திகதிகளில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் வெகுவிமரிசையாக இடம்பெற உள்ளது. முதல் நாள் வைபவத்தில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வே.பொ. பாலசிங்கம் கலந்து கொள்கின்றார். நிறைவு நாள் வைபவத்தில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொள்கின்றார். கடந்த வருடம் சிறந்த இலக்கிய நூல்களை வெளியிட்ட கிழக்கு மாகாண படைப்பாளிகள் ஏழு பேர் இலக்கிய நூல் பரிசு பெறுகின்றார்கள். அவர்களின் விபரம் வருமாறு:- சிறுவர் இலக்கியம் - ஜெனீரா ஹய்றுல் அமான் - சின்னக்குயில் பாட்டு சிறுவர் இலக்கியம் - ச.அருளானந்தம் - அற்புதமான வானம் சிறுவர் இலக்கியம் - முத்து இராதாகிருஷ்ணன் - பசுமைத் தாயகம் சிறுவர் இலக்கியம் - கே.எம்.எம்.இக்பால் - தாமரையின் ஆட்டம் சிறுகதை - மு.சுடாட்சரன் - மேட்டு நிலம் கவிதை - யு.எம்.நபீல் ...

உள்ளூராட்சி திருத்த சட்டம் கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றம்

Image
உள்ளூராட்சி திருத்த சட்டம் கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக பதினெட்டு  வாக்குகளும் எதிராக பதினொரு    வாக்குகளும் செலுத்தப்பட்டு  ஏழு மேலதிக வாக்குகளால்  நிறை வேற்றப்பாட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஜக்கிய தேசியக் கட்சியின் எதிர்கட்சித்தலைவர் தயகமேகேயும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதே நேரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான ஜவாத் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் இரா துரைரத்தினம் ஆகிய இருவரும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர். மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சபையிலிருந்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளியேறிச் சென்றார். வாக்கெடுப்பு இன்றிரவு 10.40 மணியளவில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண சபைக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி இன்றிரவு 10.40 மணிவரை நடைபெற்றது. கிழக்கு மாகாண சபை கூட்டம் தொடங்கி இரவு 10.40 மணிவரை சபை அமர்வு இடம்பெற்றது இதுவே முதற் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது

ஹாஜிகள் வழி அனுப்பி வைப்பு

Image
அம்பாறை மாவட்டத்திலிருந்து ஹஜிக்கு செல்லும் முதலாவது  குழுவினர் சாய்ந்தமருது  பள்ளி வாசலில் இருந்து  நேற்று வழி அனுப்பி வைக்கப்பட்டனர். சாய்ந்தமருது பிர தேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்  இந்நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டார்.

உலக கை கழுவல் தினம்

Image
உலக கை கழுவல் தினதயோட்டி  கல்முனை கல்வி வலயக்குட்பட்ட கமு/கணேசா மகா வித்தியாலயத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் கை கழுவுதல் பற்றிய விளக்கவுரை என்பன கல்லூரி அதிபர் கா .சந்திர லிங்கம் தலைமையில் இடம் பெற்றது.

சட்டவிரோத ஆயுதகளை ஒப்படைக்கும் காலம் நீடிப்பு

Image
மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவில்   சட்டவிரோத   ஆயுதங்களை ஒப்படைக்கும் காலஎல்லை   இம்மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்முனை பொலிஸ் பிரிவு பிரதேசத்தில் புழக்கத்திலுள்ள சட்டவிரோத ஆயுதங்களை இம்மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் பள்ளிவாசல்கள் மற்றும் கோயில்களின் ஊடாக ஒப்படைக்குமாறு கல்முனை பொலிஸார் அறிவித்திருந்தனர். ஆனால் , குறிப்பிட்ட காலப்பகுதியில் இப்பிரதேசத்திலிருந்து ஒரு ஆயுதம் மாத்திரமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதனால் இதற்கான காலக்கெடு இம்மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என கல்முனை பொலிஸ் மீண்டும் அறிவித்துள்ளது.

கல்முனை மாநகர சபை வாணி விழா

Image
கல்முனை மாநகர சபை வாணி விழா  வியாழக் கிழமை  மாநகர சபை உறுப்பினர்  எ.அமிர்தலிங்கம்  தலைமையில்  சிவசிறி  நல்ல தம்பி  குருக்களின் வழி பாட்டுடன் இடம் பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை மாநகர முதல்வர் சரஸ்வதி பூசை காளாஞ்சி சிவசிறி  நல்ல தம்பி  குருக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.மாநகர சபை உறுப்பினர்கள் ,உத்தியோகத்தர்கள்  கலந்து கொண்டனர் .

கல்முனை சேனைக்குடியிருப்பு கிட்டங்கி ஆற்றில்ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

Image
கல்முனை சேனைக்குடியிருப்பு கிட்டங்கி ஆற்றில் வைத்து குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். 15ஆம் கொலணியை சேர்ந்தவரும் சேனைக்குடியிருப்பில் வசிப்பவருமான கோவிந்தபிள்ளை குணசேகரம் என்ற 46வயதுடைய நபரே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் நேற்று இரவு 15ஆம் கொலணியில் இருந்து துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த போது கிட்டங்கி ஆற்றுக்கட்டில் தடுமாறி ஆற்றில் வீழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் மது போதையில் வந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றதுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மீட்க்கப்பட்ட சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Viewer Comments

கல்முனை முஸ்லிம் வாலிபர் இருவருக்கு மரண தண்டனை

Image
கல்முனை முஸ்லிம்  வாலிபர் இருவருக்கு கல்முனை மேல் நீதி மன்றத்தால்  இன்று  மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கல்முனை மேல் நீதி மன்ற நீதிபதி  வீ.சந்திரமணி  இந்த மரண தண்டனையை  வழங்கினார்.  கல்முனை மேல் நீதி மன்றம் ஆரம்பிக்கப்பட்டு  இரு வருடத்தில்  ஆறாவது மரண தண்டனை இதுவாகும். கல்முனை குடியை சேர்ந்த முகம்மது யூசுப் முகம்மது பரீத்  என்பவரை  2007.06.06 அன்று கத்தியால் குதி கொலை செய்த குற்றத்திற்காக இரண்டாம், மூன்றாம் எதிரிகளான முகம்மது ரபீக் பஸ்மீர், அப்துல் சரூக் முகம்மது ஹம்சா ஆகியோருக்கே மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்பு பட்ட முதலாம் எதிரியான  முத்தலிப் அக்கபர் ஹசன் என்பவர் விடுதலை செயப்பட்டார்.

ஹஜ் கடமையெய் நிறைவேற்ற செல்லும் ஹாஜிகளுக்கு ஹஜ் பற்றிய விளக்கவுரை இன்று

Image
சாய்ந்தமரு பிரதேசத்தில் இருந்து ஹஜ் கடமையெய் நிறைவேற்ற செல்லும் ஹாஜிகளுக்கு  ஹஜ் பற்றிய விளக்கவுரை இன்று சாய்ந்தமருது பள்ளிவாசலில் இடம் பெற்றது. அம்பாறைமாவட்ட ஜமியதுல் உலமா தலைவர்  எஸ்.எச்.ஆதம்பாவா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்  மௌலவி அலி அஹமது விளக்கவுரை வழங்கினார். சாய்ந்தமருது,மாளிகைகாடு பகுதியெய் சேர்ந்த சுமார் அற்பது பேர் இம்முறை ஹஜ் கடமையெய் நிறைவேற்ற செல்லவுள்ளனர்

அம்பாரை மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம்.

Image
அம்பாரை மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுக் குட்டம் நேற்று அம்பாரை கச்சேரியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலைமையில் இடம் பெற்றது. இவ் அபிவிருத்திக் கூட்டத்தில் பல்வேறு பாராளுமன்ற அமைச்சர்கள் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த, அதாவுல்லா, றிசாட் பதியுதீன் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன், கிழக்கு மாகாண ஆளுணர் மொகான் விஜய விக்ரம மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

முதல் ஹஜ் குழு 17இல் பயணம்!

Image
இம்முறை ஹஜ் யாத்திரைக்கு 5800 போ; இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான முதலாவது இலங்கை ஹஜ் குழு எதிh;வரும் 17 ஆம் திகதி பயணமாக உள்ளது. இம்முறை இலங்கையில் இருந்து சுமார் 5800 பேர் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காகச் செல்ல உள்ளதுடன் முதலாவது ஹஜ் குழுவில் சுமார் 300 பேர் செல்ல உள்ளதாக முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் வை. எல். எம். நவவி தெரிவித்தார. ஹஜ் குழுத் தலைவரும் மேல் மாகாண ஆளுநருமான அலவி மௌலானா தலைமையில் முதலாவது ஹாஜிகள் குழுவை வழியனுப்பும் நிகழ்வூ இடம்பெறவூள்ளது. இதேவேளை ஹாஜிகளின் நலன்களைக் கவனிப்பதற்காக திணைக்கள அதிகாரிகள் 4 பேரும் 6 மருத்துவர்களும் பயணமாக உள்ளதாக பணிப்பாளர் குறிப்பிட்டார். கடந்த முறை போன்று இம்முறை ஹஜ் பயணிகள் தொடர்பில் அறிவூறுத்தல்கள் எதுவூம் விடுக்கப்படவில்லை எனவூம் அவர் கூறினார். (எஸ்.டி.எம்.ஐ. 10.45)  

அடுத்த மார்ச்சில் உள்ளுhராட்சி மன்றங்களுக்கான தேர்தல்!

Image
அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவிப்பு எதிh;வரும் மார்ச் மாதமளவில் உள்ளுhராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். ஆதற்கு முன்னா; திருத்தச் சட்டமூலம் மாகாண சபைகளின் அங்கீகாரத்துக்கு விடப்படும் என அவா; குறிப்பிட்டாh;. வர்த்தமானி மூலம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட உள்ளுhராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் மாகாண சபைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் அங்கீகாரம் பெறப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான அமைச்சா; கூறினாh;. 14 நாட்களுக்குள் இதனை மாகாண சபைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்பித்து அங்கீகாரம் பெறப்படும் என்றும் தெரிவித்தார். கொழும்பு மகாவலி கேந்திரத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினாh;. இந்த புதிய உள்ளுhராட்சி தேர்தல் திருத்த சட்ட மூலம் தற்போது உள்ள வீதத்தை விட உறுப்பின...