பெரியநீலாவனையில் கஞ்சா மீட்பு


பெரியநீலாவனையில் கஞ்சா மீட்பு


கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவனை பகுதியில் இருந்து களுவாஞ்சிகுடி பொலிஸாரால் இன்றுகாலை ஒரு தொகை கஞ்சா போதைப்பொருள் மீட்க்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் எடிசன் குணதிலக, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சர் ஐ.எம்.கருணாரட்ன ஆகியோரின் பணிப்புரைக்கமைய கல்முனை பகுதிகளில் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தலைமையிலான குழுவினர் இந்த கஞ்சா போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

இதனடிப்படையில் இன்று காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கல்முனை பொலிஸ் பிரிவுக்கும் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கும் எல்லைப்பகுதியாகவுள்ள பெரியநீலாவனைப்பகுதியில் உள்ள பெண்ணொருவரின் வீட்டில் இருந்து இந்த கஞ்சா மீட்க்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தெரிவித்தார்.

சிவிலுடையில் கஞ்சா வாங்குவது போல் சென்ற பொலிஸார் குறித்த விற்பனைசெய்த இடத்தை கையுமெய்யுமாக பிடித்ததாகவும் அவர் தெரிவித்தார். இதன்போது கஞ்சா பொட்டலங்கங்கள் உட்பட பொட்டலம் செய்யப்படவிருந்த கஞ்சாவை மீட்டதுடன் பெண்ணொருவரையும் கைதுசெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த பெண்ணை நீதிமன்றில் ஆஜர்செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக களுவாஞ்சிகுடி பொலிஸாரால் பல போதைப்பொருள் விற்பனையாளர்கள் கைதுசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்