500 அபின் பக்கற்றுகளுடன் மூன்று வர்த்தகர்கள் பொலிஸாரால் கைது
கல்முனை பொதுச் சந்தைக்குள் இரு வர்த்தக நிலையங்களைச் சுற்றிவளைத்த போதே இவ் வர்த்தக நிலையங்களிலிருந்து இப் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக களுவாஞ்சக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தெரிவித்தார்.
220 பெட்டிகளில் குறித்த மதன லேகியங்கள் அடைத்து வைகப்பட்டிருந்ததாகவும் இதன் பெறுமதி சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் எனவும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் கல்முனை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் களுவாஞ்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Comments
Post a Comment