கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையிலிருந்து வைத்தியர்கள் வெளியேறியுள்ளனர்.


கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இருந்து நான்கு பெரும்பான்மையின வைத்தியர்கள் உட்பட ஐந்து வைத்தியர்கள் சுகயீனு விடுமுறை எடுத்து வெளியேறிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இன்னும் பலர் வெளியேநவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய நிபுணர் ஒருவரின் மனைவி, தமக்கு விடுத்த அச்சுறுத்தலின் பேரிலேயே தாம் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிச் செல்வதாக குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளளார்.
வெளியேறிச் செல்லும் நான்கு வைத்தியர்களும் நாளை சுகாதார அமைச்சர், அமைச்சின் செயலாளர், அமைச்சின் இணைப்பாளர் ஆகியோரை சந்தித்து, இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கவுள்ளது.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களான கிரிசாந்த, துல்மினி, நிமிர, மற்றும் அசோக்குமார் ஆகிய வைத்தியர்களே வைத்தியசாலையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 25ஆம்திகதி புதிய வைத்திய அத்தியட்சகர் நியமனம் செய்ய்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி